“இதுவே முதல்முறை” TRP-பட்டியலில் இடம் பிடித்த முக்கிய சீரியல்… இந்த வாரம் முதலிடத்தில் இரண்டு சீரியல்கள்..!!

By Soundarya on ஆனி 26, 2025

Spread the love

சின்னத்திரை மூலமாக மக்களை அதிக அளவில் கவர்ந்து வரும் சீரியல்களுக்கு எப்போதும் அமோக வரவேற்பு இருக்கும். அதனால் தான் ஒவ்வொரு சேனல்களும் போட்டி போட்டுக்கொண்டு சீரியல்களை ஒளிபரப்பி வருகிறது. இந்த சீரியல்களின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் டிஆர்பி ரேட்டிங்கும் வெளியாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் எந்த சீரியல்கள் முதல் ஆறு இடத்தை பிடித்துள்ளது என்பது குறித்து பார்க்கலாம். எதிர்நீச்சல் 2 இந்த சீரியல் டிஆர்பி ரேட்டில்   7.50 புள்ளிகளைப் பெற்று ஆறாவது இடத்தில் உள்ளது. விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் மக்களின் ஃபேவரிட் சீரியல் அய்யனார் துணை. இந்த சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டில் 7.62 புள்ளிகளை பெற்று ஐந்தாவது இடத்தில் உள்ளது.

அடுத்தது சிறகடிக்க ஆசை .இந்த சீரியல் இந்த வாரம் டிஆர்பி ரேட்டில் 7.87 புள்ளிகள் பெற்று நான்காவது இடத்தில் உள்ளது. அடுத்ததாக கயல் சீரியல். இந்த வாரம் டிஆர்பி ரேட்டிங்கில் 9.27 புள்ளிகளை பெற்று  மூன்றாவது இடத்தில் உள்ளது. அடுத்து சிங்கப்பெண்ணே சீரியல் 9.63 புள்ளிகளை பெற்று இரண்டாவது இடத்தில் உள்ளது. மூன்று முடிச்சு சீரியல் மற்றும் சின்ன மருமகள் கடந்த வாரம் மகா சங்கமமாக ஆரம்பித்து மக்கள் எதிர்பார்த்தபடி மாஸ் காட்டுகிறது. இதனால் டிஆர்பி ரேட்டிகளும் அதிகமாக புள்ளிகளை பெற்றுவிட்டது. இந்த வாரம் மகா சங்கமம் 9.80 புள்ளிகளை  பெற்று இந்த இரண்டு சீரியல்களும் முதலிடத்தில் உள்ளது.