#image_title
சின்னத்திரையில் ஒளிபரப்பப்படும் சீரியல்கள் மக்கள் மத்தியில் குறிப்பாக இல்லத்தரசிகள் மத்தியில் மிகவும் விரும்பி பார்க்கப்படுகிறது. அந்த வகையில் தொலைக்காட்சிகள் அவர்களுக்கு பிடித்தவாறு காதல், சண்டை, கோபம், பாசம், ஒற்றுமை உள்ளிட்ட காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு சினிமா முறையில் சீரியல்கள் எடுக்கப்பட்டு வருகிறது. சீரியல் என்றாலே அதில் முன்னணியில் இருப்பது சன் டிவி மற்றும் விஜய் டிவி சீரியல்கள் தான். ஆனால் தற்பொழுது டிஆர்பி-யில் முதல் 6 இடங்களையும் சன் டிவி சீரியல்களே கெத்து காட்டியுள்ளது.இதோ அந்த டாப் 6 லிஸ்ட்…
1.சிங்க பெண்ணே :
ரொமான்டிக், காதல் மற்றும் எதார்த்தமான நடிப்பு என மக்களை தன்பக்கம் ஈர்த்துள்ள தொடர் தான் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் அன்பு, ஆனந்தி மற்றும் மகேஷ் இவர்களுக்கு இடையே நடக்கும் காதல் போராட்டத்தில் யாருடைய காதல் வெற்றி பெறும் என்பது தான் கதைக்களம். இந்த சீரியல் தற்பொழுது முதலிடத்தை TRP-யில் பிடித்துள்ளது.
2.கயல்:
தன் குடும்பத்திற்க்காக ஓடி ஓடி உழைக்கும் கயலின் கதாபாத்திரம் இந்த சீரியலின் ஆணி வேராக பார்க்கப்படுகிறது. பரபரப்பாகவும், விறுவிறுப்பாகவும் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் TRP -யில் 2 வது இடத்தை பிடித்துள்ளது.
3.சுந்தரி :
முதல் பாகத்துக்கு கிடைத்த வரவேற்பை கொண்டு, தொடங்கப்பட்ட சுந்தரி சீரியலின் இரண்டாம் பாகமும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தற்பொழுது இத்தொடர் TRP -யில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
#image_title
4.எதிர்நீச்சல்:
நடிகர் மாரிமுத்துவின் இறப்பிற்கு பிறகு இந்த சீரியலின் TRP பலத்த அடிவாங்கியுள்ளது. முன்னிலை வகித்த வந்த இந்த சீரியல் தற்பொழுது 4[வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது.
5.வானத்தை போல:
அண்ணன், தங்கை பாசத்தை மையமாக வைத்து ஓளிபரப்பப்படும் இந்த சீரியல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஓவ்வொரு நாளும், பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் கூட்டமே உள்ளனர். இந்த சீரியல் TRP-யில் தற்பொழுது 5-வது இடத்தை பிடித்துள்ளது.
6.இனியா:
மாமியார் – மருமகள் சண்டையை பார்த்து சலித்து போன பலருக்கு மாமனார் – மருமகள் இடையே நடக்கும் காரசாரமான விவாதம் தான் இந்த சீரியல் குறுகிய நாட்களில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற காரணம் என கூறப்படுகிறது. இந்த சீரியல் ஆறாவது இடத்தை பிடித்துள்ளது.
இப்படி முதல் ஆறு இடங்களையும் பிடித்து TRP -யில் கெத்து காட்டி வரும் சன் டிவியை சமாளிக்க முடியாமல் மற்ற சேனல்கள் தடுமாறி வருகின்றன.
ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான மோதல் போக்கு தற்போது சர்வதேச கடல் பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஏப்ரல்…
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய ஜப்பானின் அமைதிவாத வரலாற்றில் ஒரு முக்கிய திருப்புமுனையாக, பிரதமர் சனே தகைச்சி தலைமையிலான அமைச்சரவை…
காரைக்குடி சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் போட்டியிடும் நிலையில், அவருக்கு ஆதரவாகத் திரைப்பிரபலமும், அரசியல்வாதியுமான…
நடிகர் விஜய் அரசியல் கட்சித் தொடங்கியதில் இருந்து, அவரைச் சுற்றி ஆதரவுகளும் விமர்சனங்களும் ஒருசேர எழுந்து வருகின்றன. அந்த வகையில்,…
தமிழக அரசியல் களம் தேர்தல் சூட்டை எட்டியுள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவரும் நடிகருமான விஜய் 150-க்கும்…
மதுரையில் தேர்தல் களம் அதன் உச்சக்கட்டத்தை எட்டியுள்ள சூழலில், தேர்தல் பிரச்சாரத்தின் இறுதி நாளில் அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன்…