#image_title
தமிழ் சினிமாவில் 2013ம் ஆண்டு வெளியான வில்லா 2 படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகர் அசோக் செல்வன். தொடர்ந்து இவர் சூது கவ்வும், பீட்ஸா 2 வில்லா, தெகிடி, ஆரஞ்சு மிட்டாய், சவாலே சமாளி, 144, கூட்டத்தில் ஒருத்தன், முப்பரிமாணம், சம்டைம்ஸ், ஓ மை கடவுளே, நிஜமெல்லாம் காதல் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் நடிகராக உள்ள அசோக் செல்வன், சமீபத்தில் நடித்த ‘போர்த்தொழில்’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதையடுத்து ‘ப்ளூ ஸ்டார்’ என்ற படத்தில் இவருக்கு ஜோடியாக நடித்த கீர்த்தி பாண்டியனை சமீபத்தில் காதலித்து திருமணம் செய்து கொண்டார் அசோக் செல்வன்.
நடிகர் அருண்பாண்டியனின் மூன்றாவது மகள் தான் இந்த கீர்த்தி பாண்டியன். தற்பொழுது இவர்களிருவரும் தங்களது இல்லற வாழ்க்கையை மிகச் சிறப்பாக வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் அவ்வப்பொழுது நடிகை கீர்த்தி பாண்டியன் பேட்டிகளை கொடுத்து வருகிறார். அதில் அசோக் செல்வனுக்கும், தனக்கும் உள்ள புரிதல்களை பற்றி அதிகம் பேசி வருகிறார்.
#image_title
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் அவரிடம் ‘திருமணத்துக்கு பிறகு இனி நடிப்பீங்களா? என்று கேட்ட பொழுது, அவர் இந்த கேள்வியை நீங்க அசோக் கிட்ட கேப்பீங்களா? கல்யாணம் ஆச்சுன்னா நீங்க இனிமேல் நடிப்பீங்களா சார். அப்படின்னு ஒரு ஆணை பார்த்து யாரும் கேட்கிறது. நாம 2023ல் இருக்கோம். ‘வாழு வாழ விடு’ ன்னு நாம நம்ம லைப் -அ வாழனும். நானும் individual. அவரும் individual. கல்யாணத்துக்கு அப்புறமா நடிக்குறதுல இன்னும் இன்னும் interest நிறைய இருக்கு.’ என்று பேட்டி எடுத்தவரை கதிகலங்க செய்து விட்டார். இதோ அந்த வீடியோ..
உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…