தமிழகத்தில் கோடை விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து பெற்றோர்கள், குழந்தைகள் அனைவரும் மகிழ்ச்சியாக தங்களது விடுமுறையை கழிப்பதற்காக வெக்கேஷன் சென்று வருகிறார்கள். பல இடங்களில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். அதுமட்டுமில்லாமல் கோடை காலங்களில் குடும்பத்துடன் ஊட்டி கொடைக்கானலுக்கு செல்வது வழக்கம்.
அனைவரும் ஊட்டி கொடைக்கானல் என்று செல்வதால் கூட்டம் அங்கு அலைமோதிய வண்ணம் உள்ளது. இது தொடர்பான செய்திகளை கூட நாம் பார்க்க முடிகின்றது. இந்நிலையில் ஊட்டி கொடைக்கானலுக்கு பதிலாக அதேபோன்ற புத்துணர்வை தரக்கூடிய ஒரு ஐந்து இடங்களை பற்றி தான் இதில் நாம் பார்க்கலாம்.
முதலாவது குன்னூர், ஊட்டி அருகே அமைந்துள்ள குன்னூர் மிகச் சிறந்த இடம். தேயிலை தோட்டங்கள் பார்ப்பதற்கே ரம்மியமாக இருக்கும். டால்பின் நோஸ் போன்ற பல இடங்களை சுற்றிப் சுற்றிப் பார்க்கலாம்.
ஏலகிரி தமிழகத்தில் வேலூர் மாவட்டத்தில் மலைகளால் சூழப்பட்டது ஏலகிரி. இந்த பகுதியில் அழகிய பள்ளத்தாக்கு, ரோஜா தோட்டங்கள் என பல இடங்கள் குடும்பத்துடன் சென்று வருவதற்கு ஏற்ற இடமாக இருக்கும்.
வால்பாறை ஊட்டிக்கு இணையான இடம். வால்பாறை சுற்றிலும் பசுமையாக ரம்மியமான காட்சி தேயிலை தோட்டங்கள் மூடு பணி என இயற்கை எழில் கொஞ்சும் அழகு இங்கு உள்ளது. இந்த இடத்திற்கு சென்று அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சியை கட்டாயம் நீங்கள் பார்த்து வரலாம்.
மேகமலை, தேனி மாவட்டத்திற்கு அருகே அமைந்துள்ளது. மேகமலை பெயருக்கு ஏற்றது போல் மேகங்கள் சூழ அழகிய இடமாக காட்சியளிக்கின்றது. இந்த இடத்திற்கு சென்றால் மன நிம்மதி கிடைக்கும். இந்த இடமும் குடும்பத்துடன் சென்று வருவதற்கு ஒரு ஏற்ற இடமாக இருக்கும்.
ஏற்காடு ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் ஏரி, பூங்காக்கள் என அனைத்து வசதிகளும் உள்ளது. சுற்றுலா சென்றுவர ஏற்ற இடம். குறைந்த பட்ஜெட்டில் செல்ல விரும்புவார்கள் கட்டாயம் ஏற்காட்டை தேர்வு செய்யலாம்.