Categories: CINEMA

கடந்த 10 வருடங்களில் வெளியான திரில்லர் படங்கள்.. கண்ணிமைக்காமல் பார்க்க வைத்த ‘காளிதாஸ்’..

தமிழ் சினிமாவில் திரில்லர் படங்களுக்கான ரசிகர் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது எனலாம். நூறாவது நாள், சிகப்பு ரோஜா போன்ற திரில்லர் படங்களை அப்போதைய மக்கள் புரிந்து கொள்வதற்கு சிறிது காலம் எடுத்துக் கொண்டது எனலாம். ஆனால் இன்றைக்கு ரசிகர்களின் சினிமா மீதான பார்வை என்பது நுணுக்கமாகி இருக்கிறது. ஆகையால் திரில்லர் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. அப்படி கடந்த 10 வருடங்களில் வந்த திரில்லர் படங்களை பார்க்கலாம்..

1. துருவங்கள் 16 :

கார்த்திக் நரேன் இயக்கத்தில் 2016-ம் ஆண்டு வெளியான திரைப்படம் துருவங்கள் 16. நடிகர் ரகுமான் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்திருந்த இப்படம் இன்றும் பலரால் கொண்டாடப்படுகிறது. ரகுமான் தவிர்த்து மற்ற முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்த இளைஞர்கள் அனைவருமே புது முகங்கள் தான். ஆயினும் அந்ததந்த கதாபத்திரத்திற்கு அவர்கள் பொருந்திப் போயினர். ஒரு விபத்து, ஒரு மிஸ்ஸிங் கேஸ் மற்றும் ஒரு தற்கொலை இவை பற்றிய விசாரணையில், இது மூன்றுக்கும் இடையேயான முடிச்சை கருவாகக் கொண்டு உருவாகி இருந்த இந்தப் படத்தில் இறுதி ட்விஸ்ட் யாரும் எதிர்பாரா வண்ணம் அமைந்திருக்கும்.

2. மெட்ரோ :

அதே 2016-ம் ஆண்டு ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில், ஸ்ரீஷ், பாபிசிம்ஹா, சென்ட்ராயன் உள்பட பலர் நடிப்பில் வெளியான படம் மெட்ரோ. பெரிதாக இப்படம் வந்தப் போது வரவேற்பு இல்லை என்றாலும், திருடர்களிடமிருந்து பெண்கள் எப்படி தப்பிப்பது என்ற யுக்தியை கற்றுக் கொடுக்கும் விழிப்புணர்வு படமாக மெட்ரோ படம் அமைந்திருந்தது.

#image_title

3. 8 தோட்டாக்கள் :

2017-ம் ஆண்டு ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் வெளியான படம் 8 தோட்டாக்கள். வெற்றி, அபர்ணா பாலமுரளி, எம்.எஸ்.பாஸ்கர், நாசர், மணிகண்டன் உள்பட பலர் இப்படத்தில் நடித்திருந்தனர். வேலைக்கு சேர்ந்த புதிதிலேயே 8 தோட்டாக்கள் நிரப்பப்பட்ட கைத்துப்பாக்கியை தொலைக்கும் இளம் போலீஸ் எஸ்.ஐ படும் பாடும் அந்த துப்பாக்கியில் உள்ள எட்டு தோட்டாக்களின் சட்டவிரோத பயன்பாடும் தான் ” 8 தோட்டாக்கள் ” படத்தின் கருவாக இருந்தது. அந்த துப்பாக்கி கடைசியில் யார் கையில்சிக்கியது? அந்த துப்பாக்கியை வைத்து நடந்த கொலைகளுக்கான காரணம் என்ன? அதில் இருந்த 8-தோட்டாக்கள் எத்தனை உயிர்களை பறித்தது ..? இதன் பின்னணியில் இருப்பது யார் ..? என்பது உள்ளிட்ட இன்னும் பல வினாக்களுக்கு வித்தியாசமாகவும், விறுவிறுப்பாகவும் விடை சொன்னது இப்படம்.

4. யுத்தம் செய் :

2011ல் மிஷ்கின் இயக்கிய படம் யுத்தம் செய். சேரன், ஒய்.ஜி.மகேந்திரன், லட்சுமி, ஜெயப்பிரகாஷ் உள்பட பலர் நடித்திருந்த இப்படமானது, சேரன் நடித்த ஒரே திரில்லர் படமாகும். நகரில் பெண்கள் காணாமல் போகிறார்கள், பொது இடங்களில் வெட்டப்பட்ட கைகள் ஒரு பெட்டியில் அடிக்கடி வைக்கப்படுகின்றன. இதை யார் செய்தது எனத் தெரியாமல் காவல் துறை திணறுகிறது. இதைக்கண்டு பிடிக்கும் பொறுப்பு CBCID அதிகாரி சேரன் வசம் வருகிறது. இந்தக் குற்றங்களைச் சேரன் எப்படிக் கண்டுபிடிக்கிறார் என்பதே கதை.

#image_title

5. நான் :

2012ல் ஜீவா சங்கர் இயக்கத்தில் வெளியான திரைப்படம் நான். முதன் முறையாக இசையமைப்பாளர் நடிகராக அறிமுகமானது இப்படத்தில் தான். அவருடன் சித்தார்த், வேணுகோபால் உட்பட பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். அறியாத வயதில் அறிந்தே ஒரு சிறுவன் செய்யும் தவறால் சிறைக்கு செல்கிறான். பிறகு சந்தர்ப்ப சூழ்நிலை அவனை தவறாகவே செய்ய வைத்து, அதிலிருந்து எப்படி தப்பிக்கிறான் என்பதை சொல்லி இருந்தது நான். இந்தப் பட வெற்றியை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகமாக சலீம் என்ற படமும் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

#image_title

6. குற்றமே தண்டனை :

2016-ம் ஆண்டு எம்.மணிகண்டன் இயக்கத்தில் விதார்த், ஐஸ்வர்யா ராஜேஷ் உள்பட பலர் நடிப்பில் உருவாகி இருந்தப் படம் குற்றமே தண்டனை. படத்தின் நாயகியான ஐஸ்வர்யா ராஜேஷ் மர்மமான முறையில் கொல்லப்படுகிறார். அவரை கொலை செய்தது யார்? கண்ணில் குறைபாடு இருக்கும் வித்தார்த்துக்கும், இந்த பிரச்னைக்கும் என்ன சம்பந்தம் என்பதை எடுத்துக் கூறும் படம் குற்றமே தண்டனை.

7. ஈரம்:

2009-ம் ஆண்டு அறிவழகன் இயக்கத்தில் ஆதி, நந்தா, சிந்து மேனன் உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் ஈரம். என்னதான் பேய் கதைகள் நமக்கு அலுத்துப் போய் இருந்தாலும், திரில்லர் கலந்த பேய் கதை என்பது புதிதாக இருந்தது. தனது காதலியை கொன்ற அவரது கணவரை, பேயாக மாறிய காதலி உதவியுடன் பிடிக்கும் ஹீரோவாக ஆதி இப்படத்தில் நடித்திருப்பார். பயமுறுத்தும் மேக்கப்பில், ஆங்காங்கே பயமுறுத்தும் வகையில் இப்படத்தில் பேய் வராது என்பதே வித்தியாசமாக இருந்தது. இறுதியில் உண்மை எப்படி வெளிவந்தது என்பது தான் கதை.

8. தெகிடி :

2014-ம் ஆண்டு ரமேஷ் இயக்கத்தில் அசோக் செல்வன், ஜனனி ஐயர், ஜெயப்பிரகாஷ் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் தெகிடி. கொலையை மையமாகக் கொண்டு துப்பறியும் படம். படத்தின் தலைப்பே புரியாத புதிராக உள்ளதே என்ற கோணத்தில் என்ன தான் படத்தில் எடுத்திருக்கிறார்கள் என்பதப் பார்ப்பதற்காகவே பலரும் திரையரங்கிற்கு வந்தனர். அந்த வகையில் யாரையும் ஏமாற்றாமல் பலரையும் ரசிக்க வைத்தது இந்தப் படம்.

#image_title

9. அதே கண்கள் :

2017-ம் ஆண்டு ரோகினி வெங்கடேசன் இயக்கத்தில் கலையரசன், ஜனனி உட்பட பலர் நடிப்பில் வெளியான படம் அதே கண்கள். காலம் காலமாக ஆண்களே பல பெண்களை ஏமாற்றும் கதைக்கு மாற்றாக ஒரு பெண் பல கண் தெரியாத ஆண்களை ஏமாற்றி பணம் பறித்ததை, ஏமாந்த நபரே கண் தெரிந்த பின் கண்டுப்பிடிப்பது தான் கதை.

10. காளிதாஸ் :

2019-ம் ஆண்டு ஸ்ரீ செந்தில் இயக்கத்தில் பரத், ஆன் ஷீத்தல், சுரேஷ் மேனன் உட்பட பலர் நடிப்பில் வெளியான திரைப்படம் காளிதாஸ். இப்படத்தில் பரத் ஒரு போலிஸ் இன்ஸ்பெக்டராக தோன்றுகிறார் பரத்தின் காவல் நிலைய எல்லைக்குள் தொடர்ந்து மூன்று பெண்கள் மாடியில் இருந்து விழுந்து இறந்து போகிறார்கள். இது கொலையா? அல்லது தற்கொலையா? என விசாரிக்க ஆரம்பிக்கிறார் பரத். இறுதியில் உண்மை குற்றவாளியை இவர் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பதுதான் படத்தின் கதை.

#image_title

இவை தவிர, சத்யா, வெள்ளை பூக்கள், ஓநாயும் ஆட்டுக்குட்டியும், மாநகரம், அந்தகாரம், கொலைகாரன், குரங்கு பொம்மை போன்ற பல படங்கள் நம்மை மிரள வைத்திருக்கின்றன.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

5 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

6 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

8 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

8 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

10 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

11 hours ago