Categories: சினிமா

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

Spread the love

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதி வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் சூரரை போற்று, ஜெய் பீம் உள்ளிட்ட சூப்பரான ஹிட்டு திரைப்படங்களை கொடுத்திருந்தார் சூர்யா. ஆனால் இந்த இரண்டு திரைப்படங்களும் ஓடிடி தளங்களில் வெளியானதால் பாக்ஸ் ஆபிஸில் நடிகர் சூர்யாவின் பெயர் இடம் பெறவில்லை.

இதனால் எப்படியாவது ஹிட் திரைப்படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக சன் பிக்சர் தயாரிப்பில் பாண்டியராஜன் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த எதற்கும் துணிந்தவன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. இதனால் மிகப்பெரிய வெற்றி படத்தை கொடுக்க வேண்டும் என்பதற்காக சூர்யா பாலா உடன் இணைந்து வணங்கான் திரைப்படத்தில் கமிட்டானார்.

பின்னர் ஒரு சில காரணங்களால் இப்படத்தில் இருந்து வெளியேறி விட்டார். அதனைத் தொடர்ந்து சிறுத்தை சிவா இயக்கத்தில் கங்குவா திரைப்படத்தில் நடித்திருக்கின்றார். சிறுத்தை சிவா ஏற்கனவே சிறுத்தை, வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம், அண்ணாத்த உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கியவர் இவர் நடிகர் சூர்யாவை வைத்து மிகப்பிரம்மாண்டமான திரைப்படம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

சுமார் பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் 3டி தொழில்நுட்பத்தில் உருவாகி வரும் இப்படத்தின் பணிகள் வரும் ஆகஸ்ட் மாதம் முடிவடையும் என்று படத்தின் தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் கூறி இருக்கின்றார். மேலும் ஜூன் மாதம் இந்தியன் 2 திரைப்படம், செப்டம்பர் மாதம் கோட் திரைப்படமும் வெளியாக உள்ள நிலையில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வெளியாகும் என்று அவர் தெரிவித்திருக்கின்றார்.

மேலும் இந்த படம் பத்து மொழியில் மொழிபெயர்க்க உள்ளதால் ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தை மும்பையில் பெரிய ஆபீஸ் வைத்து அமைக்கப்பட்டுள்ளதாகவும், கங்குவா படத்தின் ஹிந்தி பெல்ட் பிசினஸை பெரிய அளவில் கொண்டு செல்வதற்கு ஞானவேல் ராஜா பல திட்டங்களை வகுத்து வருவதாகவும் கூறப்படுகின்றது.

இதனால் கங்குவா திரைப்படம் மிகப்பெரிய வசூல் பேட்டை நடத்தும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த ஆண்டு தீபாவளிக்கு கங்குவா திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் சியான் விக்ரம் நடித்துள்ள தங்களான் திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகும் எனக் எதிர்பார்க்கப்படுகின்றது.

Mahalakshmi

Recent Posts

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

22 minutes ago

ஐயோ… என்னது இது?… ரயிலில் பயணியின் உணவில்… கிடந்த உலோகத் துண்டு… ஊழியர் கொடுத்த விளக்கம்… IRCTC-யின் அதிரடி ஆக்‌ஷன்…!

குவஹாத்தி செல்லும் ரயிலில் பயணம் செய்த அமித் அவஸ்தி என்ற பயணி, தனது உணவில் பாதிக்கு மேல் சாப்பிட்ட பிறகு…

27 minutes ago

திக் திக் நிமிடங்கள்… எதுவுமே வேலை செய்யல?… ரயில் விபத்திற்கு நொடிக்கு முன் இன்ஜின் அறையில்… ஓட்டுநர் கதறிய பகீர் வீடியோ… இணையத்தில் வைரல்…!

அசாம் ரயில் விபத்து நிகழ்வதற்குச் சற்று முன்பு, ரயில் இன்ஜின் அறைக்குள் எடுக்கப்பட்டதாகக் கூறப்படும் ஒரு வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.…

37 minutes ago

அதிர்ச்சி… 150 கோடியை நெருங்கும் இந்திய மக்கள் தொகை… வைரலாகும் டெல்லி AIIMS டிஜிட்டல் பலகை…!!

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் வைக்கப்பட்டுள்ள இந்திய மக்கள் தொகை கணக்கீட்டு பலகையின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.…

50 minutes ago

காரை நிறுத்தச் சொன்ன காவலரை 200 மீட்டர் தூரம் பறக்கவிட்ட ஓட்டுநர்….. மிரள வைக்கும் அதிர்ச்சி சம்பவம்…. வைரலாகும் வீடியோ….!

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டம் பன்வெல் அருகே உள்ள களம்போலி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இரவு காவல்துறையினர் வழக்கமான 'நாகாபந்தி'…

58 minutes ago

“ஐயோ சாவு இப்படியா வரணும்?”…. கண் இமைக்கும் நேரத்தில் முடிந்த நாட்டிய கனவு… நெஞ்சை பதைபதைக்க வைக்கும் ஷாக்கிங் வீடியோ….!

கன்னியாகுமரி மாவட்டம், கருங்கல் அருகேயுள்ள மத்திக்கோடு பகுதியில் நிகழ்ந்த கோர இருசக்கர வாகன விபத்தில், பூதப்பாண்டியைச் சேர்ந்த 13 வயது…

1 மணத்தியாலம் ago