Categories: CINEMA

‘தளபதி 68’ GOAT படம், இந்த ஹாலிவுட் படத்தின் ரீமேக்-ஆ..? ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கூட ஒரே மாதிரி இருக்கே.. அப்போ கதை இது தானா..!

வாரிசு, லியோ படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய் தனது 68-வது படத்தில் மும்முரமாக நடித்து வருகிறார். வெங்கட் பிரபு இயக்கத்தில், சையின்ஸ் பிக்சன் மற்றும் டைம் டிராவலை மையமாகக் கொண்டு ஒரு கலகலப்பான படமாக இப்படம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்பெல்லாம், ஒரு மொழியில் வரும் படங்களை, பிற மொழிகளில், அந்ததந்த மொழி நடிகர்களை வைத்து ரீமெக் செய்வர். ஆனால் இப்போது பான் இந்தியா என்ற பெயரில், ஒரு நடிகர் நடித்த படத்தை பிற மொழிகளில் டஃப் செய்து வெளியிட்டு வருகின்றனர்.

#image_title

இன்னும் சில படங்களின் கருக்கதையானது ஹாலிவுட் படங்களில் இருந்து எடுக்கப்பட்டதாக இருக்கக் கூடும். கொரோனா ஊரடங்கில் பலரும் ஓடிடி தளங்களில் உள்ள அனைத்து மொழி படங்களையும் பார்த்து, ஓரளவு தேறி விட்டதால், தமிழில் ஏதேனும் ஒரு படம் வந்தால் அது எந்த படத்தின் காபி, அல்லது இது மாதிரியான காட்சிகள் வேறு எந்த படத்தில் வருகிறது என்பதை உடனே சமூக வலைதளங்களில் பகிர்ந்து விடுகின்றனர். அப்படித் தான் தற்போது விஜய்யின் 68-வது படம் குறித்து சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவி வருகிறது.

#image_title

புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டு இருக்கிறது. அதில் இரு கெட்டப்பில் சையின்ஸ் பிக்சனுக்கு ஏற்றார் போல விஜய் காணப்படுகிறது. இப்படத்திற்கு THE GREATEST OF ALL TIME சுருக்கமாக GOAT என பெயரிடப்பட்டு இருக்கிறது. இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை பார்த்த ரசிகர்கள் இது அதுல்ல, என இப்படத்தின் ஒரிஜினல் படத்தை பற்றி பகிர ஆரம்பித்துள்ளனர். அதாவது 2019-ம் ஆண்டு ஹாலிவுட் நடிகர் வில் ஸ்மித் நடிப்பில் வெளியான Gemini Man என்ற படத்தின் காப்பி தான் இப்படமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழத் தொடங்கி இருக்கிறது.

தீவிரவாதிகளை அளிக்கும் டிஐ ஏஜெண்டாக இருக்கிறார் ஹென்ரி ப்ரோகன் (வில் ஸ்மித்). 2 கி.மீ தூரத்தில் 300 கி.மீ வேகத்தில் செல்லும் ரயிலில் இருக்கும் ஒருவரை சுட்டு வீழ்த்தும் அளவுக்கு திறமை உள்ளர் ஹென்ரி. அப்படி ஒரு தீவிரவாதியை சுட்டுக் கொல்கிறார். ஆனால், தான் சுட்டுக் கொன்றவர் தீவரவாதி இல்லை. அவர் ஒரு பயாலஜி விஞ்ஞானி என்பதை அறிகிறார் ஹென்றி. அவரை வேண்டும் என்றே டிஐஏ குழுவில் இருக்கும் தலைவர் ஜாக் வில்ஸ் கொலை செய்ய வைக்கிறார். இதை தன் நண்பர் மூலம் அறிந்துகொள்ளும் ஹென்ரி டிஐஏ-வில் இருந்து ஓய்வு பெற விரும்புகிறார். ஓய்வு முடிவை அறிவித்தவுடன் அவரை கொலை செய்ய முடிவு செய்கிறார் ஜாக் வில்ஸ். அந்த பயலாஜி விஞ்ஞானியை ஏன் கொலை செய்யச் சொன்னார்கள். தன்னை ஏன் கொலை செய்ய முயற்சி செய்கிறார்கள்.

#image_title

அதவும் தன்னைப் போலவே உருவம் கொண்ட நபரை யார் அனுப்பினார்கள்? என்பதை 2மணி நேரம் சொல்கிறது இந்த ஜெமினி மேன். இப்படத்தின் போஸ்டருடன், விஜய்யின் GOAT பட ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் கிட்டத்தட்ட ஒத்துப் போகிறது. ஆகையால் அப்படத்தின் ரீமெக்காக இப்படம் இருக்குமோ என்ற சந்தேகம் கோலிவுட் வட்டாரத்திலும், ரசிகர்களிடத்திலும் எழுந்துள்ளது.

Archana
Archana

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

6 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

7 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

9 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

9 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

11 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

12 hours ago