கூகுள் முதல் AI வரை.. பிசினஸில் கொடி கட்டி பறக்கும் உலகின் டாப் 10 பணக்காரர்களின் லிஸ்ட்..!

By Nanthini on தை 25, 2025

Spread the love

உலகில் தலைசிறந்த பணக்காரர்கள் குறித்து மக்கள் மத்தியில் எப்போதுமே ஒரு ஆர்வம் இருந்து வருகின்றது. சாதாரணமாக ஒருவர் வெற்றியை அடைந்து விட முடியாது. அந்த வெற்றிக்கு பின்னால் மிகப்பெரிய கஷ்டமும் உழைப்பும் இருந்திருக்க வேண்டும். இன்று உலகில் பணக்காரர்களாக இருக்கக்கூடியவர்கள் அவர்களுடைய வெற்றிக்கு பின்னால் உள்ள கதை, அவர்கள் எவ்வாறு தங்களுடைய செல்வத்தை உருவாக்கினார்கள் என்பது போன்ற கேள்விகள் மக்கள் மத்தியில் எழும். ஒவ்வொரு வருடமும் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியல் என்பது தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கும். அந்தப் பட்டியல் தொழில்நுட்பம், வர்த்தகம் மற்றும் பிற துறைகளில் ஏற்படும் மாற்றங்களை பிரதிபலிக்கின்றது. தற்போது உலகின் டாப் 10 பணக்காரர்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

Top 10 Richest People in the World Net Worth & Rankings

   

10வது பணக்காரர்:

   

NVIDIA என்ற கிராபிக்ஸ் துறையில் முன்னணி நிறுவனத்தின் தலைவர் தான் ஜென்சன் ஹுவாங். இவர்தான் உலகில் டாப் டென் பணக்காரர்கள் பட்டியலில் பத்தாவது இடத்தில் உள்ளார். தொழில்நுட்பம் வளர்ந்து கொண்டே வரும் இந்த உலகில் AI மற்றும் கேமிங் துறைகளில் NVIDIA வின் தாக்கம் என்பது தற்போது மிக பெரிதாக உள்ளது. இவரிடம் 120.2 மில்லியன் அமெரிக்க டாலர் சொத்து மதிப்பு உள்ளது. இந்திய மதிப்பில் சுமார் 10.39 லட்சம் கோடி ஆகும்.

 

Top 10 Richest People in the World Net Worth & Rankings

9வது பணக்காரர்:

மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரியான ஸ்டீவ் பால்மர் என்பவர் தான் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் உள்ளார்.  இவர் ஒரு அமெரிக்க தொழிலதிபர் மற்றும் முதலீட்டாளர் ஆவார் , அவர் 2000 முதல் 2014 வரை மைக்ரோசாப்டின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றினார்இவருடைய மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 10.89 லட்சம் கோடி எனக் கூறப்படுகிறது.

Top 10 Richest People in the World Net Worth & Rankings

8வது பணக்காரர்:

உலகிலேயே பிரபல முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃபெட் என்பவர் தான் உலகின் பணக்காரர்கள் பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளார். இவர் 2008 ஃபோர்ப்ஸ் பட்டியலில் உலகின் மிகப் பெரிய பணக்காரராய் இடம்பெற்றார். இவருடைய நிகர சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 12.63 லட்சம் கோடி என கூறப்படுகிறது.

Top 10 Richest People in the World Net Worth & Rankings

7வது பணக்காரர்:

கூகுள் நிறுவனர்களில் ஒருவராக விளங்கும் செர்ஜி பிரின் என்பவர்தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஏழாவது இடத்தை பிடித்துள்ளவர். இவருடைய மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 13.31 லட்சம் கோடி ஆகும்.

Top 10 Richest People in the World Net Worth & Rankings

ஆறாவது பணக்காரர்:

கூகுள் நிறுவனர்களில் ஒருவரான லேரி பேஜ் என்பவர்தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் ஆறாவது இடத்தை பிடித்துள்ளவர். இவருடைய மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 13.95 லட்சம் கோடி ஆகும்.

Top 10 Richest People in the World Net Worth & Rankings

5 வது மிகப்பெரிய பணக்காரர்

உலகின் பிரபல நிறுவனமான லூயி விட்டன் நிறுவனத்தின் தலைவரான பெர்னார்ட் அர்னால்ட் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தான் உலகில் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் ஐந்தாவது இடத்தை பிடித்துள்ளவர்கள். இவர்களுடைய மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 15.67 லட்சம் கோடி ஆகும்.

Top 10 Richest People in the World Net Worth & Rankings

4வது பணக்காரர்:

உலகப் புகழ்பெற்ற ஆரேக்கிள் நிறுவனத்தின் நிறுவன லேரி எல்லிசன் என்பவர்தான் உலக பணக்காரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தை பிடித்துள்ளவர். இவருடைய மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 17.68 லட்சம் கோடி ஆகும்.

Top 10 Richest People in the World Net Worth & Rankings

3வது பணக்காரர்:

புகழ் பெற்ற பேஸ்புக் நிறுவனத்தின் நிறுவன மார்க் ஜக்கர் பெர்க் தான் உலகில் அதிக சொத்து மதிப்பு கொண்ட பணக்காரர்கள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் உள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 18.30 லட்சம் கோடி ஆகும்.

Top 10 Richest People in the World Net Worth & Rankings

2வது பணக்காரர்:

அமேசான் நிறுவனத்தின் பிரபல நிறுவனரான ஜெஃப் பெசோஸ் என்பவர்தான் உலக பணக்காரர் பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 20.69 லட்சம் கோடி ஆகும்.

Top 10 Richest People in the World Net Worth & Rankings

உலகின் முதல் மிகப்பெரிய பணக்காரர்:

எலான் மஸ்க் தென் ஆப்பிரிக்காவில் பிறந்த கனேடிய, அமெரிக்க தொழிலதிபர், கண்டுபிடிப்பாளர் மற்றும் முதலீட்டாளர் ஆவார். டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் நிறுவனரான எலான் மஸ்க் உலகின் மிகப்பெரிய பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். இவருடைய மொத்த சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் 37.50 லட்சம் கோடி ஆகும்.