BREAKING: கனமழை எதிரொலி… நாளை (டிச..3) பள்ளிகளுக்கு விடுமுறை… சற்றுமுன் வெளியான அறிவிப்பு…!

By Nanthini on மார்கழி 2, 2025

Spread the love

டிட்வா புயல் சென்னையில் இருந்து 50 கிலோமீட்டர் தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக நிலை கொண்டுள்ளது. இதனால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக இன்று 4 மாவட்டங்களுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தொடர்ந்து தற்போது பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வரும் நிலையில் நாளை பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்திற்கு டிசம்பர் 3 நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் தற்போது மழை பெய்து வருவதால் அங்கும் விடுமுறை அளிக்கப்படலாம் என தெரிகிறது.