நாளையே(ஆக..23) கடைசி நாள்…. இதை செய்யாவிட்டால் கேஸ் சிலிண்டர் கட்… எல்பிஜி பயனர்களுக்குக் கடைசி வாய்ப்பு….!

By Nanthini on ஆவணி 22, 2026

Spread the love

எல்பிஜி கேஸ் சிலிண்டர்களுக்கான இ-கேஒய்சி (e-KYC) சரிபார்ப்பை ஆகஸ்ட் 23-ஆம் தேதிக்குள் நிறைவு செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அவகாசத்திற்குள் சான்றளிப்பை முடிக்கத் தவறினால் எரிவாயு விநியோக சேவையில் இடையூறுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்தச் செயல்பாட்டை உங்கள் மொபைல் போன் மூலமாகவே எளிதாகச் செய்ய முடியும். அதற்கு உங்கள் ஆதார் எண், ஆதார் மற்றும் எல்பிஜி கணக்குடன் இணைக்கப்பட்ட மொபைல் எண், 16-இலக்க நுகர்வோர் ஐடி, சம்பந்தப்பட்ட எரிவாயு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ செயலி மற்றும் ‘ஆதார் ஃபேஸ் ஆர்டி’ (Aadhaar Face RD) ஆகிய செயலிகள் கைவசம் இருப்பது அவசியம்.

பாரத் கேஸ் பயனர்கள் ‘ஹலோ BPCL’ (Hello BPCL) செயலியைப் பதிவிறக்கம் செய்து, பதிவு செய்யப்பட்ட மொபைல் எண் மற்றும் ஓடிபி (OTP) மூலம் உள்நுழைய வேண்டும். பின்னர் பாரத் கேஸ் இணைப்பைத் தேர்ந்தெடுத்து, இ-கேஒய்சி அல்லது ஆதார் சரிபார்ப்புப் பகுதிக்குச் செல்ல வேண்டும். அங்கு ஒப்புதல் அளித்து, ஆதார் ஃபேஸ் ஆர்டி செயலி மூலம் முகத்தைச் சான்றளித்து விவரங்களைச் சமர்ப்பிக்கலாம். இண்டேன் வாடிக்கையாளர்கள் ‘இந்தியன்ஆயில் ஒன்’ (IndianOil One) செயலியில் உள்நுழைந்து, தேவைப்படின் 16-இலக்க ஐடியை இணைக்க வேண்டும். அதன்பின் ஆதார் அங்கீகாரத்திற்கு ஒப்புதல் அளித்து, முகத்தை ஸ்கேன் செய்து சரிபார்ப்பை உறுதிப்படுத்திக் கொள்ளலாம்.

   

ஹெச்பி கேஸ் (HP Gas) பயனர்கள் ‘ஹெச்பி பே’ (HP Pay) செயலியைப் பதிவிறக்கி, பதிவுசெய்த மொபைல் எண் மூலம் லாக்-இன் செய்ய வேண்டும். உங்கள் கணக்கைத் தேர்ந்தெடுத்து இ-கேஒய்சி விருப்பத்தைக் கிளிக் செய்து, ஆதார் ஃபேஸ் ஆர்டி செயலி வாயிலாக முகத்தை ஸ்கேன் செய்து அங்கீகாரத்தை முடித்துக்கொள்ளலாம். குறிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி செய்யாவிட்டால் இணைப்பு நிரந்தரமாக ரத்து செய்யப்படாது; இருப்பினும் சரிபார்ப்பு முடியும் வரை விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படலாம் மற்றும் மானிய விலை உருளைகளைப் பெறுவதில் சிரமம் ஏற்படலாம். எனவே, கடைசி நேரம் வரை காத்திருக்காமல் உடனே இ-கேஒய்சி செயல்பாட்டை நிறைவு செய்வது நல்லது.