அதிர்ச்சியில் குடிமகன்கள்…! நாளை ஒருநாள் டாஸ்மாக் விடுமுறை… அதிரடி அறிவிப்பு…!!

By Soundarya on தை 27, 2026

Spread the love

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ராஜகோபாலசுவாமி கோவில் மகா கும்பாபிஷேக விழா நாளை  மிகச்சிறப்பாக நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, மன்னார்குடி, நீடாமங்கலம் மற்றும் வலங்கைமான் ஆகிய மூன்று தாலுகாக்களில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறையை ஈடுகட்டும் வகையில் பிப்ரவரி 7-ஆம் தேதி பணி நாளாகச் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விழாவிற்குப் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கைப் பேணும் வகையில் மன்னார்குடி நகரப் பகுதியில் உள்ள 14 டாஸ்மாக் மதுக்கடைகளை நாளை ஒரு நாள் மட்டும் மூடுவதற்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். குடமுழுக்கு விழாவிற்கான விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைக் காவல்துறையினர் மேற்கொண்டு வரும் நிலையில், பக்தர்களின் வசதிக்காகப் போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.