கேவலமா நடிக்கிறான்னு சொன்னீங்களே..? சௌந்தர்யா & அன்ஷிதாவை கேள்வியால் கைது செய்த VJS..!

By Soundarya on மார்கழி 21, 2024

Spread the love

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் நிகழ்ச்சியின் எட்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் நிலையில் இந்த சீசனை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். கமல்ஹாசன் அளவுக்கு எந்த ஒரு விமர்சனங்களும் வராத அளவிற்கு விஜய் சேதுபதி இந்த நிகழ்ச்சியை சிறப்பாக தொகுத்து வழங்கி வருகிறார். தவறு செய்யும் போட்டியாளர்களையும் வெளுத்து வாங்கி விடுகிறார். மற்ற சீசன்களைப் போல் இல்லாமல் இந்த சீசனில் ஆண் மற்றும் பெண் போட்டியாளர்கள் என பிரிக்கப்பட்டு நிகழ்ச்சியில் நடந்து கொண்டிருக்கிறது.

#image_title

மொத்தம் 18 போட்டியாளர்களுடன் தொடங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 6 வைல்டு கார்டு போட்டியாளர்கள் மற்றும் வாரம் தோறும் எலிமினேஷனை தொடர்ந்து தற்போது 15 போட்டியாளர்கள் உள்ளே உள்ளனர். இந்த சீசன் முடிவடைவதற்கு இன்னும் 35 முதல் 45 நாட்களே உள்ள நிலையில் ஒவ்வொரு வாரமும் இரண்டு போட்டியாளர்கள் கூட வெளியேற வாய்ப்புள்ளது. இந்த சீசனில் ஒரு சில போட்டியாளர்கள் சுவாரசியமாக விளையாடி வந்தாலும் இன்னும் சிலர் எதுவும் செய்யாமல் பாதுகாப்பாக கேம் விளையாடி வருவதாக தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்துள்ளது.

   
   

#image_title

 

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கடந்த வாரம் டபுள் எவிக்ஷன் நடந்த நிலையில் அடுத்ததடுத்த வாரங்களில் ஆர்.ஜே ஆனந்தி மற்றும் சாச்சனா, சத்யா மற்றும் தர்ஷிகா ஆகியோர் வெளியேற்றப்பட்டனர்.இறுதி கட்டத்தை பிக் பாஸ் நிகழ்ச்சியை நெருங்கிய நிலையிலும் போட்டியாளர்கள் சீரியஸாக விளையாடாமல் இருந்து வருவதை பிக் பாஸ் டீமுக்கு கோபத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் இன்றைய புரோமோ வெளியாகியுள்ளது. அதில் ராணவிற்கு அடிபட்டது குறித்து விஜய் சேதுபதி அன்ஷிதா மற்றும் சௌந்தர்யாவை வறுத்தெடுத்துள்ளார்.