தங்கம் விலையில் ‘கிடு கிடு’ உயர்வு..! இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 அதிகரிப்பு… அதிர்ச்சியில் நகைப்பிரியர்கள்..!!

By Soundarya on சித்திரை 14, 2026

Spread the love

தமிழ்நாட்டில் இன்று (ஏப்ரல் 14) தங்கம் விலை அதிரடியாக உயர்ந்து சவரன் ரூ.1,13,000-ஐத் தாண்டியுள்ளது. கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்ட தங்கத்தின் விலை, இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ.1,280 உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நேற்று ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,12,480-க்கு விற்பனையான நிலையில், இன்றைய விலை உயர்வுக்குப் பின் ரூ.1,13,760-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதேபோல், கிராமுக்கான விலையிலும் கணிசமான உயர்வு காணப்படுகிறது. நேற்று ஒரு கிராம் தங்கம் ரூ.14,060-க்கு விற்பனையான நிலையில், இன்று ரூ.160 உயர்ந்து ரூ.14,220-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் நிலவும் பொருளாதார மாற்றங்கள் மற்றும் தேவைகள் அதிகரிப்பு காரணமாகத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சத்தை நோக்கிச் செல்வதால், நகை வாங்குவோர் மற்றும் இல்லத்தரசிகள் மிகுந்த கவலை அடைந்துள்ளனர்.