ஆபரணத் தங்கத்தின் விலையானது நேற்று காலையில், 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை 1 கிராம் 70 ரூபாய் உயர்ந்து 10,360 ரூபாய்க்கும், சவரன் 560 ரூபாய் உயர்ந்து 82,880 ரூபாய்க்கும் விற்பனையானது. பின்னர் நேற்று மீண்டும் சவரனுக்கு 560 ரூபாய் உயர்ந்து 83,440 ரூபாய்க்கு விற்பனையானது. இந்நிலையில் இன்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 உயர்ந்து ரூ.84,000க்கு விற்பனையாகிறது. இதனால், நகை பிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
