BREAKING: இனி தங்கம் வாங்க கவலையே இல்ல.. சவரனுக்கு ரூ.3,360 குறைந்து அதிரடி குறைவு..!!

By Soundarya on ஆனி 25, 2026

Spread the love

தமிழ்நாட்டில் தங்கத்தின் விலை கடந்த சில நாட்களாக தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருவது பொதுமக்களிடையே பெரும் நிம்மதியை ஏற்படுத்தியுள்ளது. 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்றைய தினத்தைத் தொடர்ந்து இன்றும் அதிரடியாகக் குறைந்துள்ளது. நேற்று ஒரு கிராமுக்கு ரூ. 210 குறைந்து ரூ. 13,350-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ. 1,06,800-க்கும் விற்பனையானது. இந்த விலைச் சரிவு இன்றும் நீடித்து, ஒரு கிராமுக்கு மேலும் ரூ. 210 குறைந்து ரூ. 13,140-க்கும், ஒரு சவரனுக்கு ரூ. 1,680 குறைந்து ரூ. 1,05,120-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தங்கத்தின் இந்த தொடர் வீழ்ச்சியால், கடந்த இரண்டு நாட்களில் மட்டும் ஒரு சவரனுக்கு ரூ. 3,360 வரை விலை சரிந்துள்ளது. திருமண சீசன் மற்றும் சுபமுகூர்த்த தினங்கள் வரவிருக்கும் வேளையில், தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள இந்த அதிரடி மாற்றம் நகை பிரியர்களுக்கும், நடுத்தர குடும்பத்தினருக்கும் ஒரு பொன்னான வாய்ப்பாக அமைந்துள்ளது. விலை இன்னும் குறையுமா என்ற எதிர்பார்ப்பு ஒருபுறம் இருந்தாலும், முதலீடு செய்யவும் நகைகள் வாங்கவும் திட்டமிட்டுள்ள மக்கள் இந்தச் சாதகமான விலைச் சரிவை நல்வாய்ப்பாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என சந்தை வல்லுநர்கள் கருதுகின்றனர்.