கடந்த இரண்டு நாட்களாக எவ்வித மாற்றமும் இல்லாமல் நிலையாக விற்பனையாகி வந்த தங்கம் விலையானது இன்று சரிவைச் சந்தித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து நுகர்வோருக்கு நிம்மதியளித்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.1,16,000க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த விலை வீழ்ச்சிக்கு பின் இன்று ரூ.1,15,840க்கு விற்பனை செய்யப்படுகிறது.
இதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலையும் நேற்றுடன் ஒப்பிடுகையில் ரூ.20 குறைந்து இன்று ரூ.14,480க்கு விற்பனையாகிறது. தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளியின் விலையும் இன்று அதிரடியாகக் குறைந்துள்ளது; ஒரு கிராம் வெள்ளி ரூ.5 குறைந்து ரூ.285க்கும், தொழில்துறை மற்றும் மொத்த விற்பனையில் ஒரு கிலோ வெள்ளி ரூ.5,000 வரை சரிந்து ரூ.2,85,000க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
