தமிழகத்தில் கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கத்தின் விலை, இன்று (ஏப்ரல் 07) கணிசமாகக் குறைந்து நகைப்பிரியர்களுக்குச் சற்று நிம்மதியை அளித்துள்ளது. நேற்று ஒரு சவரன் தங்கம் ரூ.111,920-க்கு விற்கப்பட்ட நிலையில், இன்று சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.110,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.130 குறைந்து ரூ.13,860-க்கு விற்பனையாகிறது.
தங்கத்தைத் தொடர்ந்து வெள்ளி விலையிலும் இன்று பெரிய அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.5 குறைந்து ரூ.255-க்கும், ஒரு கிலோ வெள்ளி நேற்றைய விலையிலிருந்து ரூ.5,000 சரிந்து ரூ.2,55,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. உலகளாவிய பொருளாதார மாற்றங்கள் மற்றும் சந்தை நிலவரங்கள் காரணமாக இந்த விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதாகப் பொருளாதார நிபுணர்கள் கருதுகின்றனர்.
