தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் இன்று தன்னுடைய ஐம்பதாவது திருமண நாளை கொண்டாடுகிறார். மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி மகனான மு.க ஸ்டாலினுக்கும், துர்காவதிக்கும் கடந்த 1975 ஆம் வருடம் ஆகஸ்ட் 20ஆம் தேதி திருமணம் நடந்தது. இந்த நிலையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினின் ஐம்பதாவது திருமண நாள் இன்று கொண்டாடப்படும் நிலையில் 50 வருடங்களுக்கு முந்திய அவருடைய திருமண போஸ்டர் ஆனது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அதில் முதல்வர் ஸ்டாலின் – துர்காவதி ஸ்டாலின் திருமண நிகழ்ச்சி அப்போதைய கல்வி அமைச்சர் நாவலர் தலைமையில் நடைபெறும் என்றும் அச்சிடப்பட்டுள்ளது. மேலும் அப்போதைய திமுக பொருளாளர் அன்பழகன் முன்னிலையிலும் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
