BREAKING: பள்ளிகளுக்கு இன்று விடுமுறை.. காலையிலேயே அரசு வெளியிட்ட திடீர் அறிவிப்பு..!

By Nanthini on ஆனி 16, 2025

Spread the love

புதுச்சேரி மற்றும் நீலகிரியில் ஜூன் 16 இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜிப்மர் கல்லூரி மாணவர்களுடன் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்ஹார் இன்று உரையாட வருகை தர உள்ள நிலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக மாணவர்களுக்கு புதுச்சேரியில் இன்று அரை நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து கனமழை எச்சரிக்கை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள உதகை, குந்தா, பந்தலூர், கூடலூர் ஆகிய தாலுகாக்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் அறிவிப்பு வெளியாகி உள்ளது.