இப்போது அனைவருடைய வீடுகளிலும் கேஸ் அடுப்பு உள்ளது. இதனை தினமும் சமையலுக்கு பயன்படுத்துவதால் எண்ணெய் மற்றும் கிரீஸ் போன்ற விடாப்பிடியான கறைகள் அதில் படிந்திருக்கும் . அதனை அகற்றுவதற்கு ரசாயனம் கலந்த பொருட்களை பயன்படுத்துவதற்கு பதிலாக வீட்டில் இருக்கும் சில பொருட்களை பயன்படுத்தி கேஸ் அடுப்பை மீண்டும் புதிது போல மாற்றிவிடலாம். கேஸ் அடுப்பில் இருக்கக்கூடிய விடாப்பிடியான கரைகளை அகற்றுவதற்கு சிரமமாக இருந்தால் எலுமிச்சை மற்றும் உப்பு பயன்படுத்தலாம்.
இதற்கு ஒரு எலுமிச்சை பழத்தை இரண்டாக வெட்டி ஒரு துண்டின் மீது சிறிதளவு உப்பை தூவி அதனைக் கொண்டு கேஸ் அடுப்பில் இருக்கும் எண்ணெய் மற்றும் கிரீஸ் பகுதிகளை அழுத்தி தேய்க்க வேண்டும். எலுமிச்சையில் இருக்கக்கூடிய அசிட்டிக் அமிலம் உப்பின் சிறாய்ப்பு பண்பின் விடாப்பிடியான கிரீஸ் முற்றிலும் நீங்கிவிடும். பிறகு ஈரமான துணியை கொண்டு கேஸ் அடுப்பை சுத்தம் செய்தால் பளபளப்பாக மாறும்.
அதேபோல கேஸ் அடுப்பை சுத்தம் செய்ய வினிகர் மற்றும் பேக்கிங் சோடா பயன்படுத்தலாம். இதற்கு முதலில் கேஸ் ரெகுலேட்டரை அணைத்துவிட்டு அதிலிருந்து பர்ணர்களை அகற்றி விட வேண்டும். இருப்பின் மேல்பரப்பில் பேக்கிங் சோடாவை தூவிய பிறகு சிறிதளவு வெள்ளை வினிகரை சேர்க்கவும். இந்த இரண்டு கலவையானது அடுப்பில் இருக்கும் விடாப்பிடியான கிரீஸ் மற்றும் எண்ணெய் கரைகளை மென்மையாக்கி விடும். பத்து நிமிடங்கள் கழித்து பல் துலக்கும் பிரஷ் கொண்டு அடுப்பை மெதுவாக தேய்த்த பின்னர் ஈரமான துணியால் துடைத்தால் கேஸ் அடுப்பு புதுசு போல பளபளக்கும்.
அதே சமயம் கேஸ் அடுப்பில் இருக்கும் தட்டுக்கள் மற்றும் பர்ணர்கள் சுத்தம் செய்வதற்கு பாத்திரம் கழுவும் லிக்விட் மற்றும் சூடான நீர் மிகவும் பயனுள்ளது. இதற்கு ஒரு வழியில் சூடான நீரை ஊற்றி அதில் சில துளிகள் பாத்திரம் கழுவும் லிக்விடை சேர்த்து நன்றாக கலந்து அதில் தட்டுக்கள் மற்றும் பர்னர்களை போட்டு 15 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். அதன் பிறகு ஒரு பிரஷ் பயன்படுத்தி அதில் படிந்திருக்கும் அழுக்குகளை கழுகு எடுத்தால் சுத்தமாகிவிடும்.
கேஸ் அடுப்பை சுத்தம் செய்த பிறகு அடுப்பின் மீது சில துளிகள் தேங்காய் எண்ணெய் அல்லது கடுகு எண்ணெயை தடவி ஒரு உலர்ந்த துணியை பயன்படுத்தி மெதுவாக துடைத்து எடுத்தால் கேஸ் அடுப்பு புதுசு போல மாறிவிடும்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சந்தைகளில் விற்பனை செய்யப்படும் வெல்லத்தில், லாபத்திற்காகச் சுண்ணாம்பு, செயற்கை நிறங்கள் மற்றும் சோள மாவு போன்ற…
குறைந்த முதலீட்டில் எதிர்காலத்தைப் பாதுகாக்கும் நோக்கில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள ‘அடல் ஓய்வூதியத் திட்டம்’ தற்போது அனைத்து அஞ்சலகங்களிலும்…
தேசிய நெடுஞ்சாலைகளில் வாகனங்கள் விரைவாகச் செல்வதற்காகப் பயன்படுத்தப்படும் ஃபாஸ்டேக் (FASTag) நடைமுறையில், வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி முதல் முக்கியத்…
தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நீண்ட காலக் கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி, மீண்டும் போராட்டக்…
2026-ஆம் ஆண்டில் குரு பகவான் மிதுனம், கடகம், மற்றும் சிம்மம் என மூன்று ராசிகளுக்குத் தனது இருப்பிடத்தை அதிரடியாக மாற்ற…
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே இருப்பதால் தமிழக அரசியல் சூடுபிடிக்க தொடங்கிவிட்டது.…