ரீல்ஸ் எடுப்பவர்களுக்கு ஆப்பு வைத்த தமிழக அரசு… இனி இங்க யாருமே ரீல்ஸ் பண்ண முடியாது… பறந்தது அதிரடி உத்தரவு…!

By Visaka on ஆனி 30, 2026

Spread the love

சமூக வலைதளங்களில் ‘ரீல்ஸ்’ மற்றும் வீடியோக்கள் பதிவிட்டு பிரபலமடைய வேண்டும் என்ற மோகம் இன்று பலரையும் விபரீதமான செயல்களில் ஈடுபட வைக்கிறது. அந்த வகையில், விருதுநகரில் நடைபெற்ற போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமில், எவ்வித அனுமதியும் இன்றி அரசியல் கட்சி நிர்வாகி ஒருவர் குழந்தைக்கு சொட்டு மருந்து ஊட்டியதோடு, ஆய்வு செய்வது போல வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளார். மருத்துவத் துறையில் எந்தவொரு முன்அனுபவமும் இல்லாத நபர்கள், விளம்பரத்திற்காக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது பொதுமக்களின் சுகாதாரத்திற்கும், நோயாளிகளின் பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளது.

இந்த விவகாரத்தை மிகத் தீவிரமாகக் கையாண்டுள்ள தமிழ்நாடு சுகாதாரத் துறை, இனி அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் அனுமதியின்றி ரீல்ஸ் அல்லது வீடியோ எடுப்பவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடி எச்சரிக்கை விடுத்துள்ளது. முறையாக மருத்துவம் படித்தவர்கள், அங்கீகரிக்கப்பட்ட செவிலியர்கள் மற்றும் சுகாதாரத் துறை அதிகாரிகள் மட்டுமே நோயாளிகளுக்குச் சிகிச்சை அளிக்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது. மருத்துவத் துறைக்குச் சற்றும் சம்மந்தமில்லாத வெளிநபர்கள் தங்களை மருத்துவர்கள் போலக் காட்டிக்கொண்டு ஆய்வு செய்வதோ அல்லது சிகிச்சை அளிப்பது போன்ற பாவனைகளில் ஈடுபடுவதோ சட்டப்படி குற்றமாகும்.

   

மேலும், மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் தனியுரிமைக்கு எவ்விதப் பாதகமும் ஏற்படக் கூடாது என்றும், அதை மீறி வீடியோக்களைப் பதிவேற்றம் செய்பவர்கள் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை பாயும் என்றும் சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. பொதுமக்களின் உயிரோடும் ஆரோக்கியத்தோடும் விளையாடும் இத்தகைய ரீல்ஸ் கலாச்சாரத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அரசு எடுத்துள்ள இந்த அதிரடி முடிவு, மருத்துவமனைகளின் மாண்பையும் நோயாளிகளின் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.