“3 மாத காலத்திற்குள்” குரூப் 4 தேர்வு குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த TNPSC நிர்வாகம்..!!

By Soundarya on ஆடி 22, 2025

Spread the love

2025  ஆம் வருடத்திற்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு கடந்த 12ம் தேதி தமிழ்நாடு முழுவதும் நடைபெற்றது. மொத்தம் 3935 காலிப்பணியிடங்களுக்கு சுமார் 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தார்கள். அனைத்து மாவட்டங்களிலும் 4922 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு பலத்த பாதுகாப்போடு வினாத்தாள் வினியோகம் செய்யப்பட்டு தேர்வு நடைபெற்றது. டிஎன்பிசி தேர்வு நடைபெற்று முடிந்த இரண்டு வாரங்கள் கூட ஆகாத நிலையில் தேர்வுக்கான விடை குறிப்பை டிஎன்பிஎஸ் சி வெளியிட்டுள்ளது .

டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரபூர்வ இணையதளத்தில் (www.tnpsc.gov.in) தேர்வர்கள் விண்ணப்ப பதிவு எண் உள்ளிட்ட விவரங்களை கொடுத்து பார்த்துக்கொள்ளலாம். இதற்கிடையில் சேலத்தில் குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்  TNPSC வெளியிட்டுள்ள அறிக்கையில், “குரூப் 4 தேர்வுகளில் எந்த வித குளறுபடியும் நிகழவில்லை. எந்த ஒரு  OMR விடைத்தாள்களோ அட்டைப்பெட்டியில் கொண்டுவரப்படவில்லை. விடைத்தாள்கள் முறையாக சீலிடப்படாமல் அட்டைப் பெட்டிகளில் வைக்கப்பட்டதாக வெளியான தகவல்கள் ஆதாரம் மற்றவை” என்று தெரிவித்துள்ளது. மேலும் திட்டமிட்டப்படி குரூப் 4 தேர்வு முடிவுகள் 3 மாத காலத்திற்குள் வெளியாகும் என TNPSC உறுதி அளித்துள்ளது.