டிஎஸ்பி, துணை ஆட்சியர், வணிக வரி உதவி கமிஷனர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குநர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவானது வெளியாகியுள்ளது. 70 காலிப் பணியிடங்களுக்கான இந்த தேர்வை கடந்த ஜூன் மாதம் 15-ம் தேதி 2.27 லட்சம் பேர் எழுதினார்கள். முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் டிசம்பர் மாதம் முதன்மைத் தேர்வு நடைபெற இருக்கிறது. தேர்வு முடிவுகளை www.tnpsc.gov.in என்ற இணையத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
