330 பணியிடங்களுக்கான தேர்வு தேதி… TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!

By Nanthini on ஆனி 23, 2025

Spread the love

TNPSC ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வு (நேர்முகத் தேர்வு உள்ள பதவிகள்) தொடர்பான அறிவிப்பு கடந்த மே மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இதன் மூலம் 330 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான விண்ணப்ப பதிவும் கடந்த ஜூன் 11ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இப்படியான நிலையில் தமிழ் மொழி தகுதித் தாள் மற்றும் பொது அறிவு தேர்வு ஜூலை 20ஆம் தேதி நடைபெறும் என்று டி என் பி எஸ் சி சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. இதர பாடவாரியான தேர்வு தேதிகள் குறித்து அறிவிப்பு டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது.