உங்க வீட்டு கரண்ட் பில் அதிகமா வருதா?…. இனி பில் தானாகவே ரத்தாகும்… தமிழக மின்வாரியம் சொன்ன சூப்பர் குட் நியூஸ்….!

Spread the love

தமிழகத்தில் சமீபகாலமாக மின்கட்டணம் வழக்கத்தை விட பல மடங்கு உயர்ந்துள்ளதாகப் பொதுமக்கள் தரப்பில் பரவலான புகார்கள் எழுந்து வருகின்றன. வழக்கமாக ரூ.300 முதல் ரூ.500 வரை கட்டணம் செலுத்தியவர்களுக்கு தற்போது ரூ.5,000 வரையிலும், ரூ.4,000 செலுத்தி வந்த வீடுகளுக்கு ரூ.10,000-க்கும் அதிகமாகவும் கட்டணம் வந்துள்ளதாக மக்கள் அதிர்ச்சி தெரிவிக்கின்றனர். பூட்டப்பட்டிருக்கும் வீடுகளுக்குக் கூட அதிகளவு யூனிட்டுகள் கணக்கிடப்படுவதாகவும், மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் நடுத்தர குடும்பங்களைப் பாதிக்கும் வகையில் இந்த மின்கட்டணப் பிரச்சினை உருவெடுத்துள்ளதாகவும் சமூக வலைதளங்களில் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

இந்தக் திடீர் கட்டண உயர்விற்கு மின்சாரக் கணக்கீட்டில் ஏற்படும் குளறுபடிகளே முக்கியக் காரணமாகச் சுட்டிக்காட்டப்படுகிறது. வீடுகள் பூட்டப்பட்டிருக்கும்போதோ அல்லது மீட்டரைப் பார்க்க முடியாமல் போகும்போதோ, முந்தைய பயன்பாட்டை அடிப்படையாகக் கொண்டு தோராயமாக (Average) யூனிட்டுகள் கணக்கிடப்படுகின்றன. அடுத்த முறை நேரடியாக ரீடிங் எடுக்கும்போது, விடுபட்ட யூனிட்டுகளும் சேர்ந்து கணக்கிடப்படுவதால் பயன்பாடு திடீரென உயர்ந்து அதிக கட்டணம் வருகிறது. மேலும், தமிழக மின் பகிர்மான கழகத்தில் (TNPDCL) கணக்கீட்டாளர் பணியிடங்களில் சுமார் 60 சதவீதமும், ஆய்வாளர் பணியிடங்களில் 42 சதவீதமும் காலியாக இருப்பதால், அனைத்து வீடுகளுக்கும் உரிய நேரத்தில் ரீடிங் எடுப்பதில் சிக்கல் நீடிக்கிறது.

பொதுமக்களின் இந்தத் தொடர் புகார்களைத் தொடர்ந்து, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNPDCL) நுகர்வோருக்கு நிவாரணம் அளிக்கும் வகையில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதன்படி, ஜூலை அல்லது ஆகஸ்ட் 2026-ல் 500 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்திய வீட்டு நுகர்வோரின் கணக்குகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படும். முந்தைய ஜூலை – ஆகஸ்ட் கட்டணத்தை விட, வரும் செப்டம்பர் – அக்டோபர் கட்டணம் 20 சதவீதத்திற்கு மேல் திடீரென அதிகரித்திருந்தால், அந்த மின்கட்டண ரசீது (Bill) தானாகவே நிறுத்தி வைக்கப்பட்டு (Hold) மறுசரிபார்ப்பிற்கு உட்படுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தடுத்து நிறுத்தப்படும் மின் ரசீதுகளை ஆய்வு செய்து மறுபரிசீலனை செய்ய உயர் அதிகாரிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். மின்கட்டணத்தின் அளவைப் பொறுத்து ஆய்வுகள் பிரிக்கப்பட்டு ரூ.1,000 வரை கூடுதல் ஐஏ/ஆர்எஸ் அதிகாரிகளும், ரூ.1,001 முதல் ரூ.2,000 வரை வருவாய் பிரிவு ஏஎஸ், ரூ.2,001 முதல் ரூ.5,000 வரை ஏடிஓ, ரூ.5,001 முதல் ரூ.10,000 வரை வருவாய் பிரிவு ஏஏஓ மற்றும் ரூ.10,000-க்கும் அதிகமான கட்டண உயர்விற்கு உபகோட்ட ஏஇஇ (AEE) நிலை அதிகாரிகளும் நேரில் ஆய்வு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மின்வாரியத்தின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் கணக்கீட்டுக் குளறுபடிகளால் மக்கள் சந்திக்கும் வீண் அசௌகரியங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

2 மணத்தியாலங்கள் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

2 மணத்தியாலங்கள் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

3 மணத்தியாலங்கள் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

3 மணத்தியாலங்கள் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

3 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

3 மணத்தியாலங்கள் ago