BREAKING: தமிழகம் முழுவதும் மின்தடை… TNEB கையில் எடுத்த ‘அல்டிமேட்’ பிளான்…. தமிழக அரசு அறிவித்தது….!

By Nanthini on ஆடி 9, 2026

Spread the love

தமிழகத்தில் குறிப்பிட்ட சில துணை மின் நிலையங்கள், ஃபீடர்கள் மற்றும் மின் வலையமைப்புக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் தொடர்ச்சியாக மின்தடை ஏற்படுவதைக் கண்டறிந்து, அதற்கான மூல காரணத்தை (Root cause analysis) தீவிரமாக பகுப்பாய்வு செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் (TNEB) புதிய வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது.

இந்தத் திட்டமிடா மின்தடைகளுக்கு நிரந்தரத் தீர்வு காணும் வகையில், மண்டலங்கள் மற்றும் வட்டங்கள் வாரியாக உள்ளூர் தேவைகளுக்கு ஏற்ப சிறப்புச் செயல்பாட்டுத் திட்டங்களை (Action plans) உருவாக்கிச் செயல்படுத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் மின் விநியோகக் கட்டமைப்பில் உள்ள தொழில்நுட்பக் கோளாறுகள் உடனுக்குடன் சீரமைக்கப்பட்டு, பொதுமக்களுக்கு தடையற்ற மற்றும் சீரான மின்சாரம் வழங்குவது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.