தமிழக ரேஷன் கடைகளில் இனி ‘அது’ கிடையாது…. தவெக அரசின் அதிரடி உத்தரவு… ரேஷன் அட்டைதாரர்களுக்கு குட் நியூஸ்….!

By Nanthini on ஆனி 6, 2026

Spread the love

தமிழ்நாடு முழுவதும் உள்ள லட்சக்கணக்கான ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களின் வாழ்வாதாரமாக விளங்குவது பொது விநியோகத் திட்டத்தின் கீழ் செயல்படும் ரேஷன் கடைகளாகும். இங்கு வழங்கப்படும் அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு மற்றும் பாமாயில் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் பல குடும்பங்களின் தினசரி தேவையைப் பூர்த்தி செய்கின்றன. இருப்பினும், ஒருசில இடங்களில் ரேஷன் அரிசியில் கல், தவிடு, வண்டுகள் இருப்பது போன்ற புகார்களும், துவரம் பருப்பு மற்றும் பாமாயிலின் தரம் குறைவாக இருப்பது போன்ற குற்றச்சாட்டுகளும் தொடர்ந்து பொதுமக்களால் முன்வைக்கப்பட்டு வந்தன. மேலும், பொருட்கள் சரியான எடையில் வழங்கப்படுவதில்லை என்ற ஆதங்கமும் நீண்ட நாட்களாகவே இருந்து வந்தது.

   

இந்தக் குறைகளுக்கு முற்றிலும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தமிழகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள தவெக அரசு ரேஷன் கடைகளை நவீனமயமாக்கவும், பொதுமக்களுக்குத் தரமான பொருட்களை விநியோகிக்கவும் மிக முக்கிய நடவடிக்கைகளைத் தீவிரமாக எடுத்து வருகிறது. இதன் முதற்கட்டமாக, ரேஷன் பொருட்களின் விநியோக முறையில் ஒரு புதிய புரட்சிகரமான மாற்றத்தைக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. கடந்த ஆண்டு சேலம் மாவட்டத்தில் உள்ள குறிப்பிட்ட சில கடைகளில் சர்க்கரை மற்றும் துவரம் பருப்பு ஆகியவற்றைத் தனியாகப் பாக்கெட்டுகளில் அடைத்து விநியோகம் செய்த சோதனை முயற்சிக்கு, பொதுமக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

   

இந்த நல்ல வரவேற்பைத் தொடர்ந்து, சர்க்கரை, துவரம் பருப்பு மட்டுமன்றி ரேஷன் அரிசி உள்ளிட்ட அனைத்து அத்தியாவசியப் பொருட்களையுமே பாதுகாப்பான முறையில் பாக்கெட்டுகளாக மாற்றி வழங்கும் திட்டத்தைத் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளுக்கும் விரிவாக்கம் செய்ய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இது குறித்துப் பேசிய தமிழக உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் வெங்கடரமணன், ரேஷன் பொருட்கள் பாக்கெட்டுகள் மூலம் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளார். இந்த புதிய பாக்கெட் விநியோக முறையின் மூலம், கடைகளில் நடக்கும் எடை குறைப்பு போன்ற முறைகேடுகள் முற்றிலும் தடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

அதேபோல், கடந்த காலங்களில் துவரம் பருப்பு மற்றும் சமையல் எண்ணெய் போன்ற பொருட்களைக் கொள்முதல் செய்ததில் சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே பங்கேற்றதாக எழுந்த முறைகேட்டுப் புகார்களுக்குப் புதிய அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இனிவரும் காலங்களில் ரேஷன் பொருட்களுக்கான கொள்முதல் ஒப்பந்தங்கள் அனைத்தும் ‘மின் டெண்டர்’ (E-Tender) எனப்படும் ஆன்லைன் முறைக்கு மாற்றப்பட உள்ளன. இதன் மூலம் கொள்முதல் நடைமுறைகள் அனைத்தும் நூறு சதவீதம் வெளிப்படைத்தன்மையுடனும், அரசு விதிகளின்படியும் மட்டுமே நடத்தப்படும் எனத் தமிழக உணவுத்துறை தெரிவித்துள்ளது. அரசின் இந்த அதிரடி நடவடிக்கைகள் பொதுமக்களிடையே பெரும் மகிழ்ச்சியையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளன.