ரூ. 3,247 கோடி…. ஒரு சதுர அடி ரூ.22,000?…. பட்டினப்பாக்கத்தில் தமிழக அரசு பிளான் பண்ணியிருக்கும் அந்த ‘காஸ்ட்லி’ இடம் எது?…. முதல்வர் விஜய்யின் மெகா பிளான்….!

Spread the love

தமிழ்நாடு அரசு அலுவலகங்களில் அதிகரித்து வரும் இடநெருக்கடியைச் சமாளிக்கவும், எதிர்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் சுமார் ரூ.1,200 கோடி செலவில் புதிய சட்டமன்ற மற்றும் தலைமைச் செயலக வளாகம் கட்டப்படும் என முதலமைச்சர் விஜய் அண்மையில் அறிவித்திருந்தார். தற்போது வெளியாகியுள்ள நம்பத்தகுந்த தகவல்களின்படி, இந்த பிரமாண்டமான புதிய தலைமைச் செயலகம் சென்னை பட்டினப்பாக்கத்தில் அமையவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. சுமார் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் 15 மாடிகளுடன் அமையவுள்ள இக்கட்டிடத்திற்கான முதற்கட்ட ஒப்புதல்களைத் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியமும், சென்னை மாநகராட்சியும் வழங்கியுள்ள நிலையில், அரசு விரைவிலேயே கொள்கை ரீதியான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய தலைமைச் செயலகத்தை அமைப்பதற்குப் பட்டினப்பாக்கம் ஃபோர்ஷோர் எஸ்டேட், கிண்டி நெடுஞ்சாலை ஆராய்ச்சி நிலையம் மற்றும் நந்தம்பாக்கம் ஃபின்கெக் சிட்டிக்கு எதிரே உள்ள இடம் என மூன்று முக்கிய பகுதிகள் பரிசீலிக்கப்பட்டன. அதில், நகரின் மையப்பகுதியில் அமைந்து பிற அரசு அலுவலகங்களை மிக எளிதாக அணுகும் வசதி கொண்டிருப்பதால் பட்டினப்பாக்கத்தின் ஃபோர்ஷோர் எஸ்டேட் பகுதியே இறுதியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதற்காக மயிலாப்பூர் எல்லைக்குட்பட்ட 21.37 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தத் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியமும், 0.93 ஏக்கர் நிலத்தைப் பயன்படுத்தச் சென்னை மாநகராட்சியும் அனுமதி வழங்கியுள்ளன. வருவாய்த் துறைக்குச் சொந்தமான கூடுதல் நிலங்களையும் சேர்த்து, இத்திட்டம் ஒட்டுமொத்தமாக 26.5 ஏக்கர் பரப்பளவில் அமையவுள்ளது.

சாந்தோம் பிரதான சாலையிலிருந்து எளிதில் அணுகக்கூடிய இந்த நிலத்தின் தற்போதைய சந்தை மதிப்பு சதுர அடிக்கு ரூ.22,000 ஆகும். அதன்படி, 25 ஏக்கருக்கும் அதிகமான இந்த நிலத்தின் உத்தேச மதிப்பு மட்டுமே சுமார் ரூ.2,047 கோடியாகும். இதனுடன் கட்டுமானச் செலவான ரூ.1,200 கோடியைச் சேர்க்கும்போது, இந்த மாபெரும் திட்டத்தின் மொத்த மதிப்பு சுமார் ரூ.3,247 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. தேர்வு செய்யப்பட்டுள்ள இந்த இடத்தில் 1960-களில் கட்டப்பட்ட 1,300-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர் குடியிருப்புகள் சிதிலமடைந்ததால் இடிக்கப்பட்டு, தற்போது அந்த இடம் காலியாகவே உள்ளது குறிப்பிடத்தகது.

தற்போது இத்திட்டத்திற்காகத் தனது நிலத்தை வழங்கும் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியம், அரசு விதிகளின்படி நிலத்திற்கான தகுந்த மதிப்பீட்டுத் தொகையையோ அல்லது அதற்கு ஈடான மாற்று நிலத்தையோ அரசு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளது. சென்னையின் உள்கட்டமைப்பை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச் செல்லும் இந்த பிரமாண்ட திட்டம், நகரின் போக்குவரத்து மற்றும் நிர்வாக அமைப்பில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

1 மணத்தியாலம் ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

1 மணத்தியாலம் ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

1 மணத்தியாலம் ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

1 மணத்தியாலம் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

2 மணத்தியாலங்கள் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

2 மணத்தியாலங்கள் ago