‘வெளிநடப்பு செய்த திமுகவினர்’ …. பிரஸ்மீட்டுக்கு முன் பதறிய உதயநிதி… மு.க.ஸ்டாலின் கொடுத்த ரகசிய ‘ரூட் மேப்’.. அவசர அவசரமாக வந்த போன் கால்….!

Spread the love

தமிழக சட்டமன்றத்தில் இன்று நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, எதிர்க்கட்சிகளின் கேள்விகளுக்கும் குற்றச்சாட்டுகளுக்கும் பதிலளித்துப் பேசிய தமிழக முதல்வர் விஜய்யின் உரை பெரும் புயலைக் கிளப்பியது. அவையில் ஆவேசமாகப் பேசிய அவர், திமுகவினரையும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினையும் மறைமுகமாகத் தாக்கிப் பேசினார். “தமிழ்நாட்டில் ஆபாச நதியும் வன்ம நதியும் ஓடுகிறது” என்று குறிப்பிட்ட அவர், பெண்களைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள் தங்கள் வீட்டிலும் பெண்கள் இருக்கிறார்கள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும் என எச்சரித்தார். மேலும், சர்க்காரியா கமிஷன் அறிக்கையையும், டாஸ்மாக் துறையில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக அமலாக்கத்துறை அளித்த அறிக்கையையும் சுட்டிக்காட்டி, “எங்கு தவறு இருக்கிறதோ அங்குதான் திமுக இருக்கும்” என்று காட்டமாகக் குற்றம்சாட்டினார்.

முதல்வர் விஜய்யின் இந்த அதிரடி குற்றச்சாட்டுகளுக்குக் கடும் எதிர்ப்பு தெரிவித்த திமுக எம்.எல்.ஏ.க்கள், உடனடியாகத் தங்களுக்குப் பதிலளிக்க வாய்ப்பு வழங்க வேண்டும் என சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனிடம் கோரிக்கை விடுத்தனர். ஆனால் சபாநாயகர் அவர்களுக்கு அனுமதி அளிக்காததால், ஆத்திரமடைந்த திமுக உறுப்பினர்கள் சபாநாயகர் இருக்கையின் முன்பாக அமர்ந்து திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, அவையின் நடவடிக்கைகளுக்கு இடையூறு விளைவிக்கும் திமுகவினரை அவைக் காவலர்களைக் கொண்டு வெளியேற்ற வேண்டும் என்று அவை முன்னவர் செங்கோட்டையன் வலியுறுத்தினார். சபாநாயகரும் தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்களுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

அவையில் பதற்றம் நிலவிய சூழலில், திடீரென குறுக்கிட்டுப் பேசிய முதல்வர் விஜய், எதிர்க்கட்சியினரைப் பேச அனுமதிக்குமாறு சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார். முதல்வரின் கோரிக்கையை ஏற்றுச் சபாநாயகரும் அனுமதிப்பதாக அறிவித்ததால், தர்ணாவில் ஈடுபட்ட உறுப்பினர்கள் அனைவரும் அமைதியாகத் தங்களின் இருக்கைகளுக்குத் திரும்பினர். இருப்பினும், அடுத்த சில நிமிடங்களிலேயே எதிர்க்கட்சித் தலைவருக்குப் பேச வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவையில் மீண்டும் குழப்பம் ஏற்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கையைக் கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுக உறுப்பினர்கள் அனைவரும் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

சட்டமன்றத்தில் இருந்து வெளியேறிய உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களைச் சந்திப்பதற்கு முன்பாக, மூத்த நிர்வாகிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தினார். அப்போது, அவையின் நேரலை நடவடிக்கைகளை வீட்டில் இருந்து பார்வையிட்ட திமுக தலைவரும் முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். இந்த ஆலோசனையின் போது, செய்தியாளர் சந்திப்பில் எடுத்துரைக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் குறித்து அவர் வழிகாட்டுதல்களை வழங்கியதாகக் கூறப்படுகிறது. அதன் பின்னரே செய்தியாளர்களைச் சந்தித்த உதயநிதி ஸ்டாலின், மிசா சட்டம் குறித்தோ அல்லது மு.க.ஸ்டாலின் குறித்தோ பேசுவதற்கு முதல்வர் விஜய்க்கு எந்தத் தகுதியும் இல்லை என்று காரசாரமாகப் பதிலடி கொடுத்தார்.

Nanthini

Recent Posts

திக்.. திக்..! பைக் மீது பயங்கர மோதல்… திரும்பி கூட பார்க்காமல் எஸ்கேப் ஆன கார் ஓட்டுநர்… பதறவைக்கும் CCTV காட்சி…!!

கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…

42 minutes ago

“மகள் போனதும் ஆட்டம் ஆரம்பம்!”… பொறுமை இழந்த மனைவி… கொதித்து எழுந்த கோபம்… கணவன் மீது வீசப்பட்ட சூடான திரவம்… ரத்த உறைய வைக்கும் சம்பவம்…!!

உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…

48 minutes ago

திக் திக்…! திடீரென மயங்கி விழுந்த 9 வயது சிறுமி… பள்ளியில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…

60 minutes ago

என்னை கடத்திட்டாங்க…! சினிமா படத்தையே மிஞ்சிய சேசிங்… 12 கி.மீ. காரை விரட்டிப் பிடித்த போலீஸ்… சிக்கிய பெண் யார்?…!!

கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…

1 மணத்தியாலம் ago

7 மாத கர்ப்பம்… வயிற்றில் 4 குழந்தைகள்… ஒரே இரவில் மாறிய தலைவிதி… மருத்துவமனையில் அடுத்தடுத்து நடந்த அதிரவைக்கும் சம்பவங்கள்…!!

உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…

1 மணத்தியாலம் ago

“பலமுறை கருக்கலைப்பு…” 10 ஆண்டுகளாக நம்பி ஏமார்ந்த இளம்பெண்… போலீஸ் வேலை கிடைத்ததும் கம்பி நீட்டிய காதலன்… பகீர் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…

1 மணத்தியாலம் ago