தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ‘ஆக்டோ ஜியோ’ அமைப்பின் கீழ் வரும் அரசு ஊழியர் சங்கங்கள் பிப்ரவரி 3-ஆம் தேதி இன்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளன. திமுகவின் தேர்தல் வாக்குறுதிப்படி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய தமிழ்நாடு உத்தரவாத ஓய்வூதியத் திட்டத்தை தாங்கள் ஏற்கப்போவதில்லை என்றும் ஊழியர்கள் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளனர். சுமார் 6 லட்சம் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்தப் போராட்டத்தில் பங்கேற்கக்கூடும் என்பதால், அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளிகளின் செயல்பாடுகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தமிழக அரசு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாகத் தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களுக்கு ‘வேலை இல்லை – சம்பளம் இல்லை’ என்ற கொள்கை பின்பற்றப்படும் என்றும், பிப்ரவரி 3-ஆம் தேதி தற்செயல் விடுப்பு எடுக்க யாருக்கும் அனுமதி கிடையாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் தடையை மீறிப் போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ள போதிலும், தங்கள் கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டத்தைத் தொடரப்போவதாக ஊழியர் சங்கங்கள் அறிவித்துள்ளதால் பெரும் பதற்றம் நிலவி வருகிறது.
புதிதாக நடத்தப்பட்ட BNCAP மோதல் சோதனையில், ரெனால்ட் டஸ்டர் மற்றும் கியா செல்டோஸ் ஆகிய இரண்டு கார்களுமே முழுமையான 5…
தமிழக அரசியலில் தடம் பதித்துள்ள நடிகர் விஜய், தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்த தனது சொத்து விவரங்கள் குறித்த விவாதங்கள்…
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போர் பதற்றம் காரணமாக, வளைகுடா நாடுகள் தங்கள் பகுதிகளில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை…
தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், எடப்பாடி தொகுதியில் போட்டியிடும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை ஆதரித்து பாமக…
தொழில்நுட்ப உலகின் ஜாம்பவானான ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பொறுப்பிலிருந்து டிம் குக் விலகுவதாக அறிவித்துள்ளார். அவருக்குப்…
கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை அருகே காதல் திருமணம் செய்துகொண்ட கல்லூரி மாணவி, கணவர் செல்போன் அழைப்பை ஏற்காத விரக்தியில் தற்கொலை…