தமிழகத்தில் ரேஷன் கார்டு வைத்துள்ள பயனாளிகள் அனைவருக்கும் ரேஷன் கடைகள் மூலமாக இலவசமாகவும் மலிவு விலையிலும் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றது. அதேசமயம் ரேஷன் கார்டு வைத்துள்ள பயணிகளுக்கு அரசு சார்பிலும் ஏராளமான நிதி உதவிகள் வழங்கப்படுகின்றன. குறிப்பாக மகளிர் உரிமைத்தொகை பெறுவதற்கு கூட ரேஷன் கார்டு என்பது மிக முக்கியமான ஆவணமாக உள்ளது. தமிழகத்தில் சுமார் 2.26 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொது விநியோகத் திட்டம் மூலம் அத்தியாவசிய பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றது.
70 வயதை கடந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு வீடு தேடி ரேஷன் பொருட்கள் திட்டத்தை சோதனை முறையில் சில மாவட்டங்களில் செயல்படுத்தி வருகின்றது. சோதனை முயற்சி வெற்றி அடைந்த நிலையில் முதல்வர் ஸ்டாலின் விரைவில் மாநிலம் முழுவதும் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார். எனவே விரைவில் உங்கள் வீடு தேடி ரேஷன் பொருள் வந்து சேரும்.
