தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் வழங்க திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முன்னதாக சுதந்திர தின விழா உரையின்போது பிரதமர் மோடி, தீபாவளிக்கு நாட்டு மக்களுக்கு மிகப்பெரிய பரிசு காத்திருக்கின்றது. அத்தியாவசிய பொருள்களுக்கான ஜிஎஸ்டி வரி குறைக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அதன்படி இரண்டு மட்டங்களில் ஜிஎஸ்டி வரியை மத்திய அரசு தற்போது நாட்டில் நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்புக்கு போட்டியாக தற்போது தமிழக அரசு ரேஷன் அட்டைகளுக்கு ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வருடம் பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் சிறப்பு தொகுப்புடன் வேஷ்டி சேலை அரசு வழங்கியிருந்தது. ஆனால் சில வருடங்களாக வழங்கி வந்த ரொக்கம் மக்களுக்கு வழங்கப்படவில்லை. இந்நிலையில் வருகின்ற பொங்கல் பண்டிகைக்கு ரேஷன் அட்டைதாரர்களுக்கு தமிழக அரசு 5000 ரூபாய் வழங்க திட்டமிட்டுள்ளது. இதற்காக சுமார் 10,000 கோடி நிதி தேவைப்படும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதாகவும் இந்த நிதியை திரட்டுமாறு நிதித்துறைக்கு அரசு உத்தரவிட்டு உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
பொங்கல் பரிசு தொகுப்பான பச்சரிசி, வெல்லம், கரும்பு, ஏலக்காய், முந்திரி உள்ளிட்ட பொருட்களுடன் வேஷ்டி சேலையும், ஐந்தாயிரம் ரூபாய் ரொக்கமும் வழங்க திட்டமிட்டுள்ளதாக தலைமைச் செயலாக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதை தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகும் என தெரிகிறது. இப்படியான நிலையில் மகளிர் உரிமைத்தொகை பெற்று வருபவர்களுக்கு இந்த தொகை கிடைக்குமா என பலரும் கேள்வி எழுப்பும் நிலையில் இதற்கும் பொங்கல் பரிசுக்கும் தொடர்பு இல்லை என்பதால் அவர்களுக்கும் பணம் கிடைக்கும் என அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் பொருள் இல்லா ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு 5000 ரூபாய் கிடைப்பது சந்தேகம் என தெரிகிறது.
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தற்போது வரை நிலவும் சூழல், தமிழக அரசியலில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை உணர்த்துகிறது.…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளிலும்…
தமிழக வெற்றிக் கழகத்தின் வரலாற்றுச் சிறப்புமிக்க தேர்தல் முன்னிலையைத் தொடர்ந்து, அக்கட்சியின் தலைவர் விஜய்யின் தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் தனது…
தவெக தலைவர் விஜய் நடிப்பில் உருவான ‘ஜனநாயகன்’ திரைப்படம் சென்சார் விவகாரங்களால் திரையரங்குகளில் வெளியாகாத நிலையில், கடந்த ஏப்ரல் 9-ஆம்…
தமிழக சட்டமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் தமிழக வெற்றிக் கழகம் 110-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ள செய்தி, அக்கட்சியின்…
தமிழக அரசியல் வரலாற்றில் இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் திருப்பமாக, 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு 'தொங்கு சட்டசபை'…