தமிழகத்தில் ஊர்கள், தெருக்கள் மற்றும் சாலைகளின் பெயர்களுக்கு பின்னால் உள்ள சாதி பெயர்களை நீக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ள நிலையில் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளில் திருத்தங்கள் மேற்கொள்ளவும் அரசு ஆணையிட்டுள்ளது. பெயர் மாற்றத்தை உள்ளாட்சி, நிர்வாகம் முடிவு செய்த பிறகு, TNeGA, ELCOT மூலம் ஆதார் மற்றும் ரேஷன் கார்டுகளில் முகவரி திருத்தங்கள் செய்ய மக்களுக்கு முகாம்கள் அமைக்க வேண்டும் என்றும் அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
