தமிழக அரசு பெண்களின் முன்னேற்றத்திற்காகவும் அவர்களுக்கான பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலும் பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன்படி மகளிர் உரிமைத் தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்ட மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் தற்போது பெண்களுக்கு உதவும் வகையில் புதிய திட்டம் ஒன்றை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதாவது பெண்களுக்கு சுய தொழில் செய்வதற்காக 50000 வழங்கும் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்தொகை சார்பாக 200 பெண்களுக்கு சுய தொழில் செய்வதற்கு 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இதற்காக அரசு சார்பில் ஒரு கோடை நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், கைம்பெண்கள், நலிவுற்ற பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் பயனடைய முடியும். 25 முதல் 45 வயதுக்கு உட்பட்டவர்கள் தங்கள் மாவட்ட சமூக நல அலுவலரை அணுகி விண்ணப்பிக்கலாம். நடமாடும் உணவகங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், சிற்றுண்டி கடைகள் மற்றும் நடமாடும் பழச்சாறு கடைகள், சலவை கடைகள் போன்றவற்றை ஐம்பதாயிரம் ரூபாய் கொண்டு சுய தொழில் செய்யலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
இதற்காக மொத்தம் ஒரு கோடி செலவில் மானியமும் வழங்கப்படும் என தெரிவித்துள்ளது. இதற்கான ஒப்புதல் எல்லாம் பெறப்பட்டுள்ளதால் இந்த திட்டத்தில் பயன்பெற பயனாளர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. அனைத்து விதிமுறைகளும் வெளியிடப்பட்டுள்ளன. இந்த மானியத்தை பெறுபவரின் குடும்ப ஆண்டு வருமானம் 1.20 லட்சத்திற்கும் மிகாமல் இருக்க வேண்டும் எனவும் அரசு தெளிவு படுத்தி உள்ளது.
குறிப்பாக இந்த திட்டத்தில் ஒருமுறை மட்டுமே ஒருவரால் மானியம் பெற முடியும். மானியத்தை பெறுவதற்கு விண்ணப்பத்துடன் சான்றிதழ் மற்றும் வருவாய் சான்று, ஆதார் அடையாள அட்டை, குடும்ப அட்டை மற்றும் இருப்பிட சான்று ஆகியவற்றை இணைத்து மாவட்ட சமூக நல அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும். இதனை தொடர்ந்து ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டது தகுதியானவர்களுக்கு மானியம் வழங்கப்படும்.