Categories: சினிமா

SP பாலசுப்ரமணியத்தை தனக்கு பாட வைத்த எம்ஜிஆர்… கோபத்தில் TM சௌந்தர்ராஜன் என்ன செய்தார் தெரியுமா..?

Spread the love

தமிழ் சினிமாவில் எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி என இருவரும் கோலோச்சிய 60 கள் மற்றும் 70 களில் முன்னணிப் பாடகராக வலம் வந்தவர் டி எம் சௌந்தர்ராஜன். இருவருக்குமே தன்னுடைய குரலை அவர்களுக்கு ஏற்றார்போல மாற்றி பாடும் வல்லமை பெற்றவர் டி எம் எஸ். அவர் பாடிய பல பாடல்கள் இன்றும் எவர்க்ரீன் ஹிட்ஸ்களாக கேட்கப்பட்டு வருகின்றன.

ஆனால் ஒரு கட்டத்தில் புதிய பாடகர்களின் வரவு மற்றும் எம் ஜி ஆரோடு ஏற்பட்ட தனிப்பட்ட பிரச்சனை காரணமாக டி எம் எஸ் தன்னுடைய பாடும் வாய்ப்புகளை வெகுவாக இழந்தார். இளையராஜாவின் வருகைக்குப் பிறகு எஸ் பி பாலசுப்ரமண்யம் மற்றும் ஜேசுதாஸ் ஆகியோர் முன்னணி பாடகர்களாக உருவாகினர்.

#image_title

இந்நிலையில் பல ஆண்டுகளாக தனக்கு டி எம் எஸ் தான் பாடவேண்டும் என உறுதியாக இருந்த எம்ஜிஆர், முதல் முறையாக எஸ் பி பாலசுப்ரமணியத்துக்கு தன்னுடைய ‘ஆயிரம் நிலவே வா’ பாடலை பாடும் வாய்ப்பை அளித்தார். அப்போது எம் ஜி ஆருக்கும் டி எம் எஸ்-க்கும் இடையே சிறு பிரச்சனை ஒன்று ஏற்பட்டிருந்த காலம் என்பதால் இந்த முடிவை எடுத்ததாக சொல்லப்படுகிறது.

இது டி எம் எஸ்-க்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. அதன் பின்னர் தன்னை ஒரு எம் ஜி ஆர் பாடலை பாட அழைத்த போது தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தியுள்ளார். அப்போது எம் ஜி ஆர் மற்றும் சிவாஜி ஆகியோருக்கு பாடுவதற்கு ஒரு பாடலுக்கு 500 ரூபாய் வாங்கிக் கொண்டிருந்தார் டி எம் எஸ். அப்போது ஒரு பாடலுக்கு பாடகர் ஒருவர் வாங்கும் அதிக சம்பளம் இதுவாகதான் இருந்தது.

#image_title

இந்நிலையில் இப்போது பாட அழைத்த தயாரிப்பாளரிடம் “இதுவரை எம் ஜி ஆருக்கு நான் மட்டும்தான் பாடினேன் என்பதால் நீங்கள் கொடுத்த 500 ரூபாயை வாங்கிக் கொண்டேன். ஆனால் இப்போது புதிய பாடகர் ஒருவரும் வந்துவிட்டதால், எனக்கு 1500 ரூபாய் கொடுத்தால்தான் பாடுவேன்’ என தடாலடியாகக் கூறியுள்ளார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் வேறு வழியில்லாமல் அவர் கேட்ட தொகையைக் கொடுத்துதான் பாடலை பதிவு செய்தாராம்.

vinoth

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

7 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

16 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

17 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

23 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

30 minutes ago

அடுத்து யார் டார்கெட்?… மறுஆய்வு மனு தள்ளுபடி… திமுக புள்ளிகளுக்கு அடுத்தடுத்து செக்… கதவை தட்டிய லஞ்ச ஒழிப்புத்துறை… அதிர்ச்சியில் கே.என்.நேரு…!!

திமுக முன்னாள் அமைச்சர் கே. என். நேருவுக்குச் சொந்தமான மற்றும் அவருடன் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் இன்று மீண்டும்…

38 minutes ago