BREAKING: NDA கூட்டணியிலிருந்து வெளியேறியது தமாக.. ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு..!!

By Soundarya on ஆனி 14, 2026

Spread the love

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி வெளியேறுவதாக அதன் தலைவர் ஜி.கே.வாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சென்னையில் நடைபெற்ற த.மா.கா செயற்குழு கூட்டத்தில் இந்த முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கடந்த தேர்தல்களில் த.மா.கா மற்றும் அது சார்ந்த கூட்டணிகள் எதிர்பார்த்த வெற்றியைப் பெற முடியாததே இந்த முடிவுக்குக் காரணம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

கூட்டணியில் இருந்து விலகினாலும், பாஜக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகளுடன் தனக்கு எந்தவிதமான மனக்கசப்போ அல்லது சண்டையோ இல்லை என்று ஜி.கே.வாசன் தெளிவுபடுத்தியுள்ளார். தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து ஒரு நட்பு சக்தியாகவே தனது கட்சி வெளியேறுவதாகவும் அவர் தனது பேட்டியில் தெரிவித்துள்ளார். இந்தத் திடீர் அரசியல் மாற்றம் தமிழக அரசியல் வட்டாரத்தில் புதிய கூட்டணி உருவாக்கங்கள் குறித்த விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.