நடிகர் விஜய் கரூரில் பிரச்சாரம் மேற்கொண்டபோது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். நாடு முழுவதும் இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் குறித்து நடிகர் விஜய் மீது எந்த வழக்கு பதிவு செய்யப்படவில்லை. ஆனால் கட்சியின் இரண்டாம் நிலையில் உள்ள புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்ட பலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
மேலும் கரூர் சம்பவம் குறித்து விசாரணை செய்ய ஓய்வு பெற்ற நீதிபதியை வைத்து தனிநபர் ஆணையம் ஒன்றை தமிழக அரசு நியமித்துள்ளது. அருணா ஜெகதீசன் ஆணையம் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் திமுக செய்தி தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் அளித்த பேட்டி ஒன்றில், “அருணா ஜெகதீசன் ஆணையம் கைது செய்ய சொன்னால் விஜய் உடனே கைது செய்யப்படுவார்” என்று கூறியிருக்கிறார்.
