ஸ்டார் ஹீரோ நடித்த படம் என்றாலும் டப்பா படங்களாக இருந்தால் அது ஓடாது – உதாரணங்களுடன் பேசிய திருப்பூர் சுப்ரமணியன் ‘பளிச்’

By Elango on மார்கழி 23, 2025

Spread the love

சமீபத்தில் நேர்காணல் ஒன்றில் பேசிய தயாரிப்பாளர் மற்றும் வினியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியன் கூறியதாவது, எப்போதுமே நல்ல படங்கள் மட்டும்தான் ஓடும். பெரிய நட்சத்திர நடிகர்கள் நடித்த படம் என்பதால் மட்டுமே ஒரு படம் ஓடிவிடாது. அந்த ஹீரோவுக்காக மக்கள் வந்து படத்தை பார்த்துவிட மாட்டார்கள். இதற்கு உதாரணமாக பல படங்களை என்னால் சொல்ல முடியும்.

எம்ஜிஆர் உச்சத்தில் இருந்த போதுதான் அவர் நடித்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் படம் வந்து பிளாப் ஆனது. அதே போல் ரஜினி பீக்கில் இருந்த போதுதான் வெளியான பாபா படம் சரியாக போகவில்லை. அதே போல் விஜய் உச்ச நடிகராக இருந்த போது வந்த பைரவா படம் ஓடவில்லை. டாப் நடிகராக அஜீத்குமார் இருந்த போது வெளியான ஜி படமும் ஓடவில்லை. அதனால் பெரிய ஹீரோ என்பதற்காக எந்த காலத்திலும் டப்பா படங்கள் ஓடியதில்லை என்று கூறியிருக்கிறார்.