அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் கழகத்தின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம், திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் டி.டி. காமராஜை கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கி அதிரடி உத்தரவிட்டுள்ளார். கழகத்தின் கண்ணியத்திற்குத் தீங்கு விளைவிக்கும் வகையிலும், அமைப்புக்குக் களங்கமும் அவப்பெயரும் உண்டாகும் விதத்திலும் அவர் செயல்பட்டதே இந்த ஒழுங்கு நடவடிக்கைக்கான காரணமாக ஓபிஎஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த அதிரடி நீக்கத்தைத் தொடர்ந்து, காலியாக உள்ள திருப்பூர் புறநகர் மாவட்டச் செயலாளர் பதவிக்கு மாரிமுத்து என்பவரை நியமித்து ஓபிஎஸ் உத்தரவிட்டுள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தனது அணியைப் பலப்படுத்தி வரும் ஓபிஎஸ், கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மீது இத்தகைய கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவது அரசியல் வட்டாரத்தில் கவனத்தைப் பெற்றுள்ளது.
