இன்றைய காலகட்டத்தில் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து துறைகளிலும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றது. இருந்த இடத்திலிருந்து கொண்டே அனைத்து வேலைகளையும் செல்போன் மூலம் இறுதியில் முடித்து விட முடியும். அதன்படி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் வசதிக்காக ஒவ்வொரு மாதமும் முன்னதாகவே பக்தர்களுக்கான தரிசன டிக்கெட் வெளியிடப்பட்டு வருகின்றது.
அந்த தரிசன டிக்கெட்டை whatsapp மூலமாக எளிதில் பெறலாம். அதற்கு முதலில் ஆந்திரா அரசின் 9552300009 என்ற நம்பருக்கு Hi என மெசேஜ் அனுப்ப வேண்டும். பிறகு EN என்று மெசேஜ் செய்து service பற்றிய தகவல் ஆங்கிலத்தில் வரும். அதில் TTD temple services என்பதை தேர்வு செய்ய வேண்டும். டிக்கெட் இருப்பை சரிபார்த்து தேவையான டிக்கெட் மற்றும் நேரம் ஆகியவற்றை உங்களின் அரசு ID உடன் உள்ளிட்டால் டிக்கெட் வாட்ஸப்பிலேயே கிடைத்துவிடும்.
