ஒவ்வொருத்தருடைய வாழ்விலும் கஷ்ட நஷ்டங்கள் இருக்கும் ஏற்ற இறக்கங்கள் இருக்கும். எல்லோருக்கும் வாழ்க்கை சந்தோசமாகவும் இருக்காது. அதே நேரத்தில் கஷ்டமே வாழ்க்கை என்றும் இருக்காது. ஒரு நேரம் இல்லாமல் ஒரு நேரம் இருக்காது. மாற்றங்கள் வரத்தான் செய்யும். ஆனால் நமது மனநிலை சூழ்நிலைக்கு ஏற்றவாறு மாறும். சில நேரம் ஏண்டா வாழ்கிறோம் என்ற அளவுக்கு கூட வாழ்க்கையில் கஷ்டம் வரலாம். ஆனால் எதிர்மறை எண்ணங்கள் வராமல் நேர்மறை எண்ணங்களோடு பாசிட்டிவாக இருப்பது எப்படி பாசிட்டிவ் ஆக நம்மை வைத்துக் கொள்வது எப்படி போன்ற ஒரு சில டிப்ஸ்களை இங்கே பார்ப்போம்.
தினமும் காலை தூங்கி எழும்பும்போது இன்றைய நாள் நல்ல நாள் இன்றைக்கு எனக்கு நல்லதே நடக்கும் என்று கூறிக்கொண்டு உங்கள் இஷ்ட தெய்வத்தை ஒரு முறை மனதில் நினைத்து விட்டு எழும்புங்கள். எந்த ஒரு விஷயத்தை நீங்கள் பார்க்கும் பொழுது அதில் இருக்கும் பாசிட்டிவ் விஷயங்களை மட்டுமே பாருங்கள். நெகட்டிவ்வை சிந்திக்காதீர்கள். ஒரு விஷயம் நெகட்டிவாக போகும்போது அதை பாசிட்டிவாக எப்படி மாத்தலாம் என்பதை பற்றி யோசிங்கள்.
எப்போதுமே உங்களை சுற்றி ஊக்கப்படுத்தும் நல்ல வார்த்தைகளை கூறும் நண்பர் வட்டாரங்களை வைத்துக் கொள்ளுங்கள். தேவை இல்லாமல் உங்களை down செய்யும் நபர்களின் பழக்கத்தை குறைத்துக் கொள்ளுங்கள். உங்களுக்கு மிகவும் மனது கஷ்டமாக இருக்கிறது நெகட்டிவ் எண்ணங்கள் வருகிறது என்றால் உடனே அந்த எண்ணத்தில் இருந்து உங்களை வேறு திசைக்கு திருப்ப ஏதாவது உங்களுக்கு பிடித்தவற்றை செய்யுங்கள்.
நெகட்டிவ் எண்ணங்கள் வரும்போது பாடல் கேட்பது வெளியே செல்லுவது விரும்பியதை வாங்கி சாப்பிடுவது வீட்டை சுத்தப்படுத்துவது புத்தகங்கள் படிப்பது என்பது போல Mind Distract செய்யுங்கள். எண்ணம் போல் வாழ்க்கை என்று முன்னோர்கள் கூறுவார்கள். அது போல் நம் எண்ணங்கள் எப்படி இருக்கிறதோ அதுபோல்தான் நம் வாழ்க்கை அமையும். எப்போதும் பாசிட்டிவாக Think பண்ணும் பொழுது உங்களுடைய வாழ்க்கையும் பாசிட்டிவாக மாறும் என்பது நிதர்சனமான உண்மை.