நார்வேஜியன் 4×4 வொர்க்அவுட்…! இந்த ஒரு பயிற்சியை செய்தால் போதும்…! உங்க இதயத்தை ஸ்ட்ராங்காக வைக்க டாக்டர் சொல்லும் டிப்ஸ் இதோ…!

Spread the love

தற்போதைய காலகட்டத்தில் மாறிவரும் வாழ்க்கை முறை மற்றும் முறையற்ற உணவுப் பழக்கவழக்கங்களால் இளம் வயதிலேயே பலர் இதயம் தொடர்பான கடுமையான பிரச்சனைகளுக்கு உள்ளாகி வருகின்றனர். இந்நிலையில், விசாகப்பட்டினத்தில் உள்ள பிரபல சிம்ஹாத்ரி மருத்துவமனையின் மருத்துவர் சுதாகர், இதயத்தை 20 ஆண்டுகள் இளமையாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கான சிறப்புப் பயிற்சி முறையைப் பரிந்துரைத்துள்ளார்.

‘நார்வேஜியன் 4×4 வொர்க்அவுட் என்று அழைக்கப்படும் இந்த ‘ஹை இன்டென்சிட்டி இன்டர்வெல் டிரெய்னிங்” கார்டியோ பயிற்சியானது, ஜப்பானில் 20,000 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் பெரும் நன்மைகளைத் தருவது உறுதி செய்யப்பட்டுள்ளது. தொடக்கத்தில் 5 முதல் 10 நிமிடங்கள் வரை லேசான பயிற்சிகளைச் செய்த பிறகு, 4 நிமிடங்கள் அதிவேகமாக ஓடுவது அல்லது கார்டியோ பயிற்சிகளை மேற்கொண்டு, பின்னர் 4 நிமிடங்கள் மெதுவாக நடப்பதன் மூலம் இதயத் துடிப்பைச் சீராக்கி தசைகளை வலுப்படுத்த முடியும்.

இந்த 4 நிமிட அதிவேகப் பயிற்சி மற்றும் 4 நிமிட ஓய்வு சுழற்சியை மொத்தம் 4 முறை செய்ய வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்துகிறார். ஆரம்ப கட்டத்தில் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரு முறையோ செய்யத் தொடங்கி படிப்படியாக இதைப் பழக்கப்படுத்திக் கொள்ளலாம். ஏற்கனவே இதயப் பிரச்சனை உள்ளவர்கள் மற்றும் உடற்பயிற்சி செய்து பழக்கம் இல்லாதவர்கள் மருத்துவ ஆலோசனைக்குப் பிறகே இதைத் தொடங்க வேண்டும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

“திமுக – அதிமுக ரகசிய கூட்டணியா?… “என்னை மீறி செங்கல்லைக் கூட வைக்க முடியாது!” – தமிழக அரசுக்கு சீமான் பகிரங்க எச்சரிக்கை…!!

மதுராந்தகம் தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜானகி ராமனை ஆதரித்து அச்சரப்பாக்கத்தில் பரப்புரை மேற்கொண்ட அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர்…

52 seconds ago

ஜெயலலிதா பாணியை கையில் எடுத்த CM விஜய்…. மதுராந்தகத்தில் ஒர்க் அவுட் ஆகுமா இந்த ஃபார்முலா?… அதிரும் அரசியல் களம்….!

மதுராந்தகத்தில் இன்று நடைபெறவுள்ள 'மதச்சார்பற்ற சமூக நீதி வெற்றி கூட்டணி' பொதுக்கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பங்கேற்காமல் கூட்டணி கட்சி…

13 minutes ago

“விசிகவில் உச்சகட்ட மோதல்?”…. ரூ.755 கோடி தங்க மோதிர திட்டத்தில் திருமாவளவன் vs வன்னி அரசு…. அதிர்ச்சி திருப்பம்….!

தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்குள் எழுந்துள்ள இருவேறு பார்வைகளும் மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்ட…

17 minutes ago

CM விஜய்யுடன் மேடையில் அமமுக MLA…. தவெகவில் ரகசிய இணைப்பு…. கலக்கத்தில் டிடிவி தினகரன்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

தமிழக அரசியல் களத்தில் முன்னணி சக்தியாக உருவெடுத்து வரும் தமிழக வெற்றிக் கழகத்தின் விஜய், தாராபுரத்தில் நடத்திய பிரச்சாரப் பொதுக்கூட்டம்…

21 minutes ago

சீச்சீ… என்னடா இது கொடுமை… சுவிக்கியில் ஆர்டர் செய்த முட்டைகள்… அழுகிய நிலையில் டெலிவரி… இணையத்தில் வெடித்த உணவு பாதுகாப்பு விவாதம்…!

சுவிக்கி இன்ஸ்டாமார்ட் மூலம் ஆர்டர் செய்து பெறப்பட்ட முட்டைகள் அழுகிய நிலையில் இருந்ததாக பயனர் ஒருவர் பகிர்ந்த சமூகவலைதளப் பதிவு…

1 மணத்தியாலம் ago

8-ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்…!!  ஊரக வளர்ச்சித் துறையில் கொட்டிக்கிடக்கும் பணியிடங்கள்… விண்ணப்பிக்க கடைசி தேதி எப்போது…? முழு விவரம் இதோ…!!

மதுரை மாவட்ட ஊரக வளர்ச்சி அலகின் கீழ் இயங்கும் அலங்காநல்லூர், உசிலம்பட்டி மற்றும் திருமங்கலம் ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள…

1 மணத்தியாலம் ago