டாப்பர் ஆகணுமா….? இதோ அந்த ‘சீக்ரெட்’…. விடைத்தாளில் மாணவர்கள் செய்யும் இந்த மேஜிக் தெரியுமா…?

By Devi Ramu on சித்திரை 20, 2026

Spread the love

பொதுத்தேர்வுகளில் அதிக மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடிக்கும் மாணவர்களின் ரகசியத்தை ஆசிரியர் ஒருவர் சமூக வலைதள வீடியோ மூலம் விளக்கியுள்ளார். மாணவர்கள் பாடங்களைப் படிப்பதுடன், விடைகளைத் தாளில்Presentation செய்யும் முறையும் மதிப்பெண்களைத் தீர்மானிப்பதில் முக்கியப் பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு புதிய வினாவிற்கும் புதிய பக்கத்தைப் பயன்படுத்துவது விடைத்தாளைப் பார்க்கத் தூய்மையாகவும், திருத்துபவர்களுக்கு எளிமையாகவும் மாற்றும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், கையெழுத்து அழகாகவும், தெளிவாகவும் இருப்பது திருத்துபவர் மத்தியில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தும். விடைகளைப் பத்திகளாக எழுதாமல், தலைப்புகள் மற்றும் குறிப்புப் புள்ளிகளாக (Points) பிரித்து எழுதுவது கூடுதல் மதிப்பெண் பெற உதவும். அடித்து எழுதுவதைத் தவிர்த்து, விடைத்தாளைச் சுத்தமாகப் பராமரிப்பதன் மூலம் சராசரி மாணவர்கள்கூடத் தேர்வுகளில் அதிக மதிப்பெண்களைக் குவிக்க முடியும் என அந்த ஆசிரியர் அறிவுறுத்தியுள்ளார்.