தபால் நிலையத்தின் ‘நேர வைப்புத் திட்டம்’ (Time Deposit Scheme) முதலீட்டாளர்களுக்குப் பாதுகாப்பான மற்றும் அதிக லாபம் தரும் வாய்ப்புகளை வழங்குகிறது. இத்திட்டத்தில் 5 ஆண்டு கால முதலீட்டிற்கு அதிகபட்சமாக 7.5% வட்டி வழங்கப்படுகிறது. உதாரணமாக, ஒருவர் 4.5 லட்சம் ரூபாயை 5 ஆண்டுகளுக்கு டெபாசிட் செய்தால், முதிர்வு காலத்தில் வட்டி மட்டுமே சுமார் 2.02 லட்சம் ரூபாய் கிடைக்கும். இதன் மூலம் மொத்தத் தொகையாக 6.52 லட்சம் ரூபாய் வரை ஈட்ட முடியும் என்பதுடன், வருமான வரிச் சட்டத்தின் 80சி பிரிவின் கீழ் வரிச்லுகையும் பெறலாம்.
இத்திட்டத்தில் முதலீட்டாளர்கள் தங்கள் வசதிக்கேற்ப 1, 2, 3 அல்லது 5 ஆண்டுகள் என கால அளவைத் தேர்வு செய்து கொள்ளலாம். முதலீடு செய்வதற்கு இதில் அதிகபட்ச வரம்பு எதுவும் கிடையாது என்பதால், பெரிய தொகையையும் ரிஸ்க் இன்றி சேமிக்கலாம். தனிநபர் மட்டுமின்றி கூட்டுக் கணக்காகவும் இதனைத் தொடங்க வசதி உள்ளது. நிலையான வருமானம் மற்றும் அரசு உத்தரவாதம் இருப்பதால், நடுத்தர வர்க்கத்தினருக்கு இது ஒரு மிகச்சிறந்த சேமிப்புத் தேர்வாகப் பார்க்கப்படுகிறது.
