விடைபெறுகிறேன்..! “இது எனது வாழ்நாள் பாக்கியம்” ஆப்பிள் நிறுவனத்திலிருந்து விடைபெறும் டிம் குக்.. உருக்கமான பிரியாவிடை கடிதம்..!!

By Soundarya on சித்திரை 21, 2026

Spread the love

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி (CEO) பதவியிலிருந்து டிம் குக் வரும் செப்டம்பர் மாதம் விலக உள்ளதாக அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. சுமார் 15 ஆண்டுகளாக ஆப்பிள் நிறுவனத்தை வெற்றிகரமாக வழிநடத்திய டிம் குக், தனது பதவி விலகல் குறித்து ஒரு உருக்கமான கடிதத்தைப் பகிர்ந்துள்ளார். செப்டம்பர் 1-ம் தேதி முதல் அவர் இந்தப் பொறுப்பிலிருந்து விலகுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிம் குக் விலகுவதைத் தொடர்ந்து, ஆப்பிள் நிறுவனத்தின் புதிய தலைமைச் செயல் அதிகாரியாக ‘ஜான் டெர்னஸ்’ (John Ternus) நியமிக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது ஆப்பிள் நிறுவனத்தின் வன்பொருள் பொறியியல் (Hardware Engineering) பிரிவின் மூத்த துணைத் தலைவராகப் பணியாற்றி வருகிறார். பதவி விலகினாலும், டிம் குக் ஆப்பிள் நிறுவனத்தின் நிர்வாகத் தலைவராக (Executive Chairman) நீடிப்பார் என்றும், ஜான் டெர்னஸ் நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்ல அவர் உதவுவார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

   

டிம் குக் தலைமையில் ஆப்பிள் நிறுவனம் சுமார் 3.6 டிரில்லியன் டாலர் மதிப்புள்ள மாபெரும் தொழில்நுட்ப சக்தியாக வளர்ந்தது. ஸ்டீவ் ஜாப்ஸுக்குப் பிறகு ஆப்பிளைப் பொறுப்பேற்று நடத்திய டிம் குக், ஐபோன் மற்றும் பிற தயாரிப்புகள் மூலம் நிறுவனத்தை உலகின் உச்சத்திற்குக் கொண்டு சென்றார். “ஆப்பிளை வழிநடத்தியது எனது வாழ்நாள் பாக்கியம்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். ஆப்பிள் நிறுவனத்தின் இந்தத் தலைமை மாற்றம் சர்வதேசத் தொழில்நுட்ப உலகில் ஒரு மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது.