ரஷ்யாவின் ரோஸ்டோவ்-ஆன்-டான் (Rostov-on-Don) பகுதியில் உள்ள சர்க்கஸில், சாகச நிகழ்ச்சியின் போது எதிர்பாராத விதமாகப் பாதுகாப்பு வளையத்தைத் தாண்டி புலி ஒன்று கூட்டத்திற்குள் பாய்ந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மூன்று புலிகள் மற்றும் இரண்டு பயிற்சியாளர்கள் வளையத்திற்குள் சாகசம் செய்து கொண்டிருந்தபோது, திடீரென பாதுகாப்பு வலை (Safety Net) சரிந்து விழுந்தது. இதனால் மிரட்சியடைந்த ஒரு புலி, உடனடியாகத் தடுப்புகளைத் தாண்டி பார்வையாளர்கள் அமர்ந்திருந்த பகுதிக்குள் குதித்தது.
Chaos erupts as tiger leaps into crowd after circus barrier collapses pic.twitter.com/UnIxNr4dvz
— New York Post (@nypost) April 20, 2026
புலி கூட்டத்திற்குள் புகுந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்த மக்கள், சிதறி அடித்துக்கொண்டு ஓடினர். சிறு குழந்தைகள் மற்றும் குடும்பங்களுடன் வந்திருந்தவர்கள் பீதியில் உறைந்தனர். இருப்பினும், சர்க்கஸ் பயிற்சியாளர்கள் சாமர்த்தியமாகச் செயல்பட்டு, அந்தப் புலியைப் பாதுகாப்பாகக் கூண்டுக்குள் கொண்டு சென்றனர். இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், பாதுகாப்பு விதிமீறல்கள் குறித்து ரஷ்யப் புலனாய்வுத் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
