தமிழகத்தில் மலைப்பகுதிகளை தாண்டி நகரப்பகுதிகளிலும் ஒட்டுண்ணிகள் மற்றும் பூச்சிகளால் ஏற்படும் உண்ணி காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. இது ஒரு வகையான பாக்டீரியா தொற்று. ரிக்கட்ஸியா எனப்படும் பாக்டீரியா பாதித்த ஒட்டுண்ணிகள், பூச்சிகள் உள்ளிட்ட உயிரினங்கள் மனிதர்களை கடிக்கும் போது உண்ணி காய்ச்சல் ஏற்படுகிறது. பாதிப்பு ஏற்பட்டவருக்கு காய்ச்சல், தலைவலி, உடல் சோர்வு ஆகியோற்றுடன் தடிப்புகள் போன்றவை முக்கிய அறிகுறிகளாக உள்ளன. பெரும்பாலும் திருவண்ணாமலை உள்ளிட்ட மலைப் பகுதியிலும். புதர் மண்டிய இடங்களில் வசிக்கும் மக்களிடையே இந்த பாதிப்பு அதிகரித்து வருகிறது.
தற்போது சென்னை போன்ற பெருநகரங்களிலும் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இந்த பாதிப்பு ஏற்பட்டால் பூச்சிக்கடி, தோலில் சிவப்பு சிவப்பாக சிறிய தடிப்புகள் ஏற்படும். குளிர் காய்ச்சல், தலைவலி போன்ற அறிகுறிகள் இருக்கும். ஆரம்பத்தில் கண்டறியாமல் அலட்சியப்படுத்தினால் பூச்சி கடித்த இடத்தில் ரத்தக்கட்டு ஏற்பட்டு உள்ளுறுப்புகள் செயலிழக்கும்.
