Categories: சினிமா

ஒரு கதை புதிதாக இருந்தால் தயாரிப்பாளர்கள் பயப்படுகிறார்கள்… தியாகராஜன் குமாரராஜா பகிர்ந்த சம்பவம்!

Spread the love

இந்திய சினிமாவுக்கும் தமிழ் சினிமாவுக்கு வயது நூறைத் தாண்டி சென்று கொண்டிருக்கிறது. உலகளவில் அதிகம் சினிமா உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. ஆனாலும் இந்திய சினிமாக்கள் உலக திரைப்பட விழாக்களில் பெரியளவில் தாக்கம் செலுத்தவில்லை.

குறிப்பாக உலகின் பெரும்பாலான நாடுகளில் இல்லாத விதமாக இந்திய சினிமாக்களில் பாட்டு, இடைவேளை என கமர்ஷியல் அம்சங்கள் சேர்க்கப்படுகின்றன. இது படத்தின் திரைக்கதையையே பாதிக்கின்றன.

ஆனாலும் இந்திய சினிமாவில் சில அரிய பரிசோதனை முயற்சிகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அப்படி தமிழ் சினிமாவில் ஒருவராக தோன்றியவர்தான் தியாகராஜன் குமாரராஜா. அவர் இதுவரை இயக்கியது இரண்டே படங்கள்தான். ஆரண்ய காண்டம் மற்றும் சூப்பர் டீலக்ஸ் ஆகிய படங்கள்தான்.

அந்த இரு படங்களும் மிகப்பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் அவரது படங்களைக் கொண்டாடவும் சிலாகிக்கவும் ஒரு சிறிய அளவிலான கூட்டம் உள்ளது. இந்நிலையில் இந்தியாவில் புதுமையானக் கதைகளை எழுதுவதில் இயக்குனர்கள் மற்றும் எழுத்தாளர்களுக்கு இருக்கும் சிக்கல்கள் குறித்து ஒரு மேடையில் பேசியுள்ளார்.

அதில் “நான் ஒருமுறை பிரபல இந்தி திரைக்கதை எழுத்தாளர் ஜாவேத் அக்தர் அவர்களை பார்க்க போயிருந்தேன். அப்போது அவர் ஒரு விஷயத்தை சொன்னார். அது எனக்கு ரொம்ப முக்கியமான விஷயமாகப் பட்டது. அவர் ஒரு நல்ல கதையை எழுதிவிட்டு, அதை ஒரு முன்னணிதயாரிப்பாளரிடம் போய் சொல்லியுள்ளார்.

செல்வதற்கு முன்னால் அவர் அந்த கதைமேல் மிகவும் நம்பிக்கையோடு சென்றுள்ளார். அந்த கதையை சொல்வதற்கு முன் கூட தயாரிப்பாளரிடம் ‘இந்த கதையை நான் சொல்லும்போது உங்களால் ஒருநிமிடம் கூட அதில் இருந்து விலக முடியாது. தண்ணீர் கூட குடிக்கமாட்டீர்கள்” என சொல்லிவிட்டு அதன் பின் கதையை முழுவதுமா சொல்லியுள்ளார்.

அந்த கதையைக் கேட்ட தயாரிப்பாளர் ‘இது மிகச்சிறப்பாக , புதுமையாக இருக்கிறது. நீங்கள் சொன்னது உண்மைதான். எனக்கு தண்ணீர் கூட குடிக்க தோன்றவில்லை. ஆனால் நான் இதை தயாரிக்க மாட்டேன் என்று சொல்லியுள்ளார். ஏனென்றால் நான் இதற்கு முன் இதுபோல கதையைக் கேட்டதேயில்லை. இது புதிதாக இருக்கிறது’ என்று சொன்னாராம்.” எனப் பகிர்ந்துள்ளார்.

vinoth

Recent Posts

“80% அரசியல்வாதிகள் ஆபாசப் படம் பார்க்கின்றனர்” அடுத்த குண்டை தூக்கி போட்ட பப்பு யாதவ்..!!

பீகார் மாநிலத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் (MP) பப்பு யாதவ், அரசியல்வாதிகள் குறித்துப் பகீர் கிளப்பும் வகையில் ஒரு சர்ச்சைக்குரிய…

9 மணத்தியாலங்கள் ago

பொதுமக்களுக்கு முக்கிய அறிவிப்பு.! நாளை தங்கம் வாங்க முடியாது.. இதுதான் காரணம்.!!

தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நாளை மாநிலம் முழுவதும் உள்ள நகைக்கடைகள் இயங்காது என்று தங்கம் மற்றும்…

9 மணத்தியாலங்கள் ago

BREAKING: ஈரான் போர்… இந்தியாவிற்கு வந்த அதிர்ச்சி செய்தி…!!

ஹார்முஸ் நீரிணை வழியாகச் சென்ற இரண்டு இந்தியக் சரக்குக் கப்பல்களை (Sanmar Herald மற்றும் Jag Arnav) ஈரான் தாக்கியதைத்…

9 மணத்தியாலங்கள் ago

“அண்ணன்” என்று கூறி ஏமாற்றிய மனைவி… வாட்ஸ்அப் ஸ்டேட்டஸில் திருமணப் புகைப்படம்… கடைசியில் காதல் மனைவி கொடுத்த ‘ஷாக்’..!!

கர்நாடக மாநிலம் மாண்டியா மாவட்டத்தைச் சேர்ந்த பன்னங்காடி கிராமத்தில், காதல் திருமணத்தில் முடிந்த ஒரு உறவு, துரோகத்தில் முடிந்துள்ள அதிர்ச்சிகரமான…

9 மணத்தியாலங்கள் ago

விஜய் – திரிஷா விவகாரம்…! “எனக்குத் தெரியும்!” வதந்திகளுக்கு வனிதா கொடுத்த அதிரடி பதிலடி….!!

நடிகர் விஜய் மற்றும் திரிஷா குறித்து சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு வதந்திகளுக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் நடிகை…

10 மணத்தியாலங்கள் ago

சீனியர் செங்கோட்டையனை டீலில் விட்ட விஜய்…! கோபிசெட்டிபாளையம் தொகுதியில் பிரசாரம் செய்யாதது ஏன்…?

அதிமுகவின் மூத்த தலைவராக இருந்து தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த செங்கோட்டையன், தற்போது அக்கட்சியில் ஓரங்கட்டப்படுவதாக எழுந்துள்ள புகார்கள் அரசியல்…

10 மணத்தியாலங்கள் ago