அடடே… இளையராஜா இசையால் துபாயில் மலர்ந்த காதல்… சார்பட்டா துஷாராவின் ரகசியக் காதலர் யார் தெரியுமா?… வைரல் பேட்டி…!

By Swetha on ஆவணி 12, 2026

Spread the love

நடிகை துஷாரா விஜயன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், தனது காதல் வாழ்க்கை மற்றும் எதிர்காலக் கனவுகள் குறித்துப் பகிர்ந்துள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஒருவரைக் காதலித்து வருவதாகவும், முதன்முதலில் துபாயில் சந்தித்த இவர்கள் இளையராஜாவின் இசை மூலமாக இணைந்ததாகவும் தெரிவித்துள்ளார். தனது அனைத்து செயல்களையும் பொறுத்துக்கொள்ளும் காதலன் யார் என்பதைப் பொருத்தமான நேரம் வரும்போது வெளிப்படுத்துவதாகக் கூறியுள்ள அவர், வாழ்க்கையை அந்தந்தக் கணத்திலேயே ரசித்து வாழ வேண்டும் என்பதை உணர்த்தும் ‘Carpe Diem’ என்ற வார்த்தையை டாட்டூவாகக் குத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்காலக் கனவுகள் குறித்துப் பேசிய துஷாரா, நடிகை பிரியங்கா சோப்ராவின் தன்னம்பிக்கை தன்னை மிகவும் ஈர்த்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். எதிர்காலத்தில் அவருடன் இணைந்து ஒரு நல்ல ஆக்‌ஷன் படத்தில் நடிக்க வேண்டும் என்பதும், தன்னை ஒரு நடிகையாக சர்வதேச அளவில் அடையாளப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதும் தன் ஆசை என்று கூறியுள்ளார். பெரிய இலக்குகளை நிர்ணயித்து அதற்காகத் தொடர்ந்து முயற்சித்தால், சரியான நேரத்தில் நமக்கான வாய்ப்புகளை வாழ்க்கை நிச்சயமாகத் தரும் என்ற நம்பிக்கை அவருக்கு இருப்பதாகப் பகிர்ந்துள்ளார்.

   

ஏழு வருடங்களுக்கு முன்பு தான் இந்த இடத்தில் இருப்பேன் என்று நினைக்கவில்லை என்றாலும், இன்னும் ஏழு வருடங்கள் கழித்து எங்கு இருப்பேன் என்பதில் தெளிவு இருப்பதாக உறுதியளித்துள்ளார். ஆசைப்படக்கூடத் தெரியாத வயதிலேயே நினைக்காத நல்ல விஷயங்கள் தன் வாழ்க்கையில் நடந்துள்ளதால், தன் கனவுகள் மற்றும் பயணிக்கும் பாதையின் மீது தனக்கு ஆழமான நம்பிக்கை இருப்பதாக துஷாரா விஜயன் நம்பிக்கையுடன் கூறியுள்ளார்.