Actor Ajith Kumar

மங்காத்தா படத்தை தொடர்ந்து அடுத்து ரி ரிலீஸ் செய்யப்படும் அஜீத்குமாரின் படம் – இது வேற லெவல் படமாச்சே என குஷியான ஏகே ரசிகர்கள்!

By Elango on மாசி 19, 2026

Spread the love

தமிழ் சினிமாவில் இப்போது ரீ ரிலீஸ் படங்களுக்கு மிகப்பெரிய வரவேற்பும் வசூலும் கிடைத்து வருகிறது. அதனால் 10 ஆண்டுகள் முதல் 30 ஆண்டுகளுக்கு முன்பு வெளியாகி சூப்பர் ஹிட் படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட பல படங்கள் மீண்டும் திரைக்கு புதுப்பொலிவுடன் வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் நடிகர் அஜீத்குமார் நடித்த மங்காத்தா படம் ரி ரிலீஸ் செய்யப்பட்டு பெரிய அளவில் வசூலை குவித்தது. இப்போது மீண்டும் அஜீத்குமார் நடித்த மற்றொரு படம் ரி ரிலீஸ் செய்யப்படுகிறது.

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில் அஜீத்குமார் நடிப்பில் உருவான படம் துணிவு. இந்த படம் கடந்த 2023ம் ஆண்டு வெளியானது. இந்த படத்தில் அஜீத்குமாருடன் மஞ்சு வாரியர் தர்ஷன் சமுத்திரக்கனி என பலர் நடித்திருந்தனர். 2023ம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்கு வெளியான துணிவு படம் உலக அளவில் 210 கோடி ரூபாய் வசூலை குவித்தது குறிப்பிடத்தக்கது. அதனால் இந்த படம் மீண்டும் ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது. விரைவில் இந்த படம் திரைக்கு வர உள்ள நிலையில் இதுவரை 15 லட்சம் ரூபாய்க்கு மேல் இந்த படத்துக்கு முன்பதிவு நடந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.